பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密器4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உடையார் இன்மையின் தானே வந்துற்ற பொருளும், சுங்க வரியாக வரும் பொருளும், பகைவர் திறையாகத் தரும் பொருளும் வேந்தன் பொருளாகின்றது. இன்றைய அரசியலில் முதல்வகைக்கு வழி இல்லை. உடையார் இல்லை யெனினும் தாயத்தார் வழக்கு போட்டு அதை அடைந்து விடுகின்றனர். சுங்கப் பொருள் அறவழியில் வந்தடைந்தால் மிக நன்று. இங்கு அரசு ஊழியர்கள் முறை கேடான வழியைக் கையாண்டு கையூட்டு பெறுவதை விழிப்புடன் தடுத்து நிறுத்துதல் அரசின் கடமை. ஒன்னார் தெறு பொருளுக்கு மக்களாட்சி முறையில் இடமே இல்லை. நட்பு கொண்டுள்ள வல்லரசுகளிடம் மானியமாகவும் குறைந்த வட்டிக்கு நீண்ட நாள் கடனாகவும் பெறுவதற்கு வழி உண்டு; பெற்று வருவதும் நடை முறையில் உள்ளது. அறங்கூறு அவை மூலம்: அரசனே நேரில் வழங்கும் நீதியேயன்றி அறங்கூறு அவைகளின் மூலமும் நிதி வழங்கப். பெறும் மரபும் இருந்து வந்தது. இக்காலத்தில் நீதிபதி களை அரசு ஆய்ந்து தக்கவர்களை நியமிப்பது போலவே அக்காலத்தில் அரசனே இந்த அவையத்தினரை நியமித்து வந்தான். இந்த அவையத்திலிருந்தோர் ளுெமன் கோலன்ன நடுவு நிலை பெற்றுச் சிறந்திருந்தனர். இத்தகையோர் கூடிய அவை அறமறக் கண்ட நெறிமான் அவையம்’ என்று. பேசப்படுகின்றது. இந்த அவையை அமைப்பதில் அரசன் மிக்க பொறுப்புடன் செயற்பட்டான். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக (புறம் - 71) என்று கூறும் வஞ்சினத்தால் திறமையில்லாத ஒருவனை தியமித்து முறை கலங்கிக் கொடுங்கோல் செய்த பழியுடை யேனாகுக' என்று கூறுவதால் அறநெறியில் அவன் கொண்டிருந்த ஊற்றமும் அதை நிலை நிறுத்தும்