பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யிற்று' என்று விளக்குவர் இளம் பூரணர். இங்ங்னம் வழுவினான் ஒருவன் செயல் அகநானுாற்றுத் தலைவன் ஒருவனிடம் காணப்பெறுகின்றது.இது சார்த்துவகைகளால் வந்த புறச் செய்தியில் குறிக்கப் பெறும் ஒருவன் இழி. செயலாகலின், அகத்தில் சுட்டி ஒருவர் பெயர் கூறாமை யில் காணும் தலைவர் பெருமைகட்கு இழுக்கு தருவ: தொன்றன்று என்பது ஈண்டு அறியத் தக்கது. கள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு பெண் மகளைக் களவில் கூடி இப்பால் அறியேன்” என்கின்றான். இச்செய்தி அறங் கூறு அவையத்தின் முன்னர் கொணரப்பெறுகின்றது. அவர்கள் முன்னரும், அப்பேதை அறியேன்” என்று கூறி பொய்ச் சூளும் உரைக்கின்றான். அதன்மேல் அவையத் தார், இச்செய்திக்கு அறிகரி (நெஞ்சறிந்தகரி) கேட் கின்றனர். தோள்புதி துண்ட ஞான்றைச் சூளும் பொய்யோ கடலறி கரியே' என்றாற் போல இவன் அப்பெண்ணைக் கண்டு மகிழ்ந்த இடம் ஒரு மரம் எனக் கேட்டுணர்ந்து, அங்குச் சென்ற அவையத்தார், அவனை அம்மரக்கிளையினைப் பற்றிக் கொண்டு நான் அறியேன்” எனச் சூளுறக் செய்கின்றனர். பாலைக்கலியில் பொய்க்கரி கூறினான், தன் அடிக்கண் இருக்கப் பெற்ற மரமும் கவின்வாடி நெருப்புப் பற்றி எரியும் என்னும் கருத்தில், கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி எரிபொத்தில் என்று கூறியிருப்பது போல, இங்ங்னம் பொய்ச்சூழ் செய் கின்றான். இவன் தீண்டிய கிளையும் தீப்பட்டு சாம்ப 57. அகம்-320. 58. கலி. 34-அடி.10