பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 劉67 ராகின்றது. அதுகண்டு அவையத்தார் ஆரவாரம்செய்து, உண்மையை நிலை நாட்டி, அக்காதலர் இருவரையும் கூட்டி வைக்கின்றனர். இக்குறிப்பு பிறிதொரு அகப் பாடலிலும் காணப்பெறுகின்றது. கரும்பமல் படப்பைப் பெரும்பெயர் கள்ளுர்த். திருதுதல் குறுமகள் அணிநலம் வவ்விய அறனி லாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே (முறிஆர்-தளிர்கள்பொருந்திய] (அகம்-25:6): என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம், இன்னும் மூன்று கவராய கிளைகளிள் நடுவே வைத்து பிணித் தலும் நீறுதலைப் பெயலும் அஞ்ஞான்று குற்றத்திற்கு விதிக்கும் தண்டனைகளாம் என்னும் செய்திகளையும் அறிகின்றோம். அறிகரி பொய்க்கும் செய்தி நற்றிணையில் மிக இனிமை பயக்குமாறு நுவலப் பெற்றுள்ளது. அறத்தொடு நின்று வெளிப்பட்ட பின்னும் தலைமகன் வரைந்து கொள்ளாது பொருள்வயிற் பிரிந்து நெடுந் தொலைவு சென்று உறைகின்றான். அவன் பிரிவை ஆற்றாத தலை மகள் திங்களை நோக்கிப் பேசுகின்றாள். மேகத்தின் பிடர்மேல் தோன்றி எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே, நீ நிறையும் நேர்மையும் உடையை. நினக்குத் தெரியாமல் மற்ைந்து உறையும் உலகம் ஒன்று இல்லை. எனக்குத் தெரியாமல் மறைந்தொழுகும் என் காதலர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாயாக’ என்று இரந்து வேண்டுகின்றாள். திங்கள் விடை கூறவில்லை. ஆகவே அதன்மீது வெறுப்புற்று மீட்டும் அதனை நோக்கித் திங்களே, நீ அறிந்த அளவு சான்று கூறாது.