பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黔蕊急 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பொய்யை மேற்கொண்டிருத்தல் காரணமாக நல்ல அழகிழந்த என் தோள் போல வாட்டமுற்று நாடேறும் சிறுகச் சிறுகக் குறைந்து நின் விழிப்புலம் மறைதலாலே நீ காட்டுவதுதான் இயலுமோ? இயலாதல்லவா?’ என்கின் றாள். உண்மை உரையாது பொய்த்தலின் அதற்கு தேய்தலும் வளர்தலுமான தண்டனை வழங்கப் பெற் றுள்ளது என்பன தலைவியின் குறிப்பு (நற். 196). நீதி மன்றத்தில் பொய்க்கரி கூறுவோரின் மொழிகள் உவமை யாகவும் எடுத்தாளப் பெற்றுள்ளன. கைக்கரி யன்னவன் பகழி கண்டகர் மொய்க்குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின மைக்கரு மனத்தொரு வஞ்சன் மாண்பிலன் பொய்கரி கூறிய கொடுஞ்சொல் போன்றவே : 1கை - துதிக்கை: பகழி - அம்பு, கண்டகர் கொடிய அரக்கர்கள், மை - கரியர் இது கரன்வதைப் படலத்திலுள்ள ஒரு பாடல். பொய்ச் சாட்சி மொழிகள் சொன்னவர்களது குலத்தை வேரொடு, அறுத்தல் போல, இராமனது அம்புகள் அரக்கர் குலத்தை வேருடன் அறுத்துத் தள்ளின என்று விளக்குவான் கம்ப மனிதர்களால் ஏற்படுத்தப்பெறும் நீதி வழங்கும் அமைப்புகள் சரியாக இயங்கா என்று கருதி இளங்கோ அடிகள் தம் கற்பனையில் புதியதோர் அமைப்பைத் தம் காவியத்தில் படைத்துக் காட்டுகின்றார். புகார் நகரத் தில் 'பூத சதுக்கம்’ என்ற ஒர் அமைப்பு உண்டு; இதில் பூதம் ஒன்று அறவழியிலிருந்து விலகி நிற்போருக்குத் தண்டனை வழங்கி விடும். தவமறைத் தொழுகும் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் 59. கரன்வதை-125