பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 3.6% அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்கரி யாளர் புறங்கூ றாளர்என் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குரல் எழுப்பிப் பூதம் புடைத்துண்ணும் பூத சதுக்கமும்" (கரி - சான்று, நயப்போர்-விரும்புவேர்; பாசத்துக்கை பாசத்திடத்து) என்று காட்டுவர். இங்குப் பூதம் கூடாவொழுக்கத்தில் ஒழுகும் போலித் துறவியர், தீநெறியில் ஒழுகும் பெண்டிர், அறை போகும் அமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்ச் சான்று பகர்வோர், புறங்கூறுவோர் ஆகிய இவர்களைப் பாசத்தாற் கட்டி நான்கு காதம் சுற்றளவு வரைக் கேட்குமாறு கடுங்குரல் எழுப்பி நிலத்தில் புடைத்து உண்டு விடும். ஒருசமயம் ஒரு கற்புடை மகள்மீது வறி யோன் ஒருவன் அவள் கணவனுக்கு அறியாக் கரி புகன்று பொய்த்தான். இவன் பூதத்தின் பாசத்தில் அகப் பட்டதை அறிந்து அவனுடைய தாய் பாசத்தினுள் சென்று தன் உயிர் கொண்டு தன் மகனுயிரைத் தந்திடுமாறு வேண்டு கின்றாள். பூதம் அதற்கு இணங்காமல், நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பிங் கில்லை" (பரகதி - மேலானகதி) என்று கூறி அவளுக்கெதிரே மகன் உயிரைப் புடைத்து உண்டது. ஆட்சியாளர்களும், நீதிமன்றத்தினரும் வழுவும் முறை யொன்றினையே கடைப் பிடித்து வரும் மக்களாட்சி நிலவும் இக்காலத்தில் இத்தகைய 'பூதசதுக்கம் போன்று. அமைப்பு ஒன்று இருப்பின் மக்கள் அறவழி நீதி பெறுவர் என்று நாம் கருதலாமல்லவா? 60. சிலப். இந்திரவிழவூர்-128-134. 61. சிலப் : அடைக்கலக்.(84 - 85)