பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 G தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கோல் கோடி நீதி வழங்கியவரின் நிலைபற்றி விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் காணப்பெறுகின்றது, ஆரம் பூண்ட மணிமார்பா! அயோத்திக் கரசே அண்ணாகேள்: ஈரம் இருக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது வாரங் கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி ஒரஞ் சொன்னக் குடியதுபோல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே" என்பது அப்பாடல். தனது வல்லமையினால் வழக்குத் தீர்த்து ஒர வஞ்சனை செய்பவர் குடிபோல உதிர்ந்து கிடக்கின்றன இலைகள் என்று இராமன் தம்பிக்கு எடுத் துரைக்கின்றான். ஒரம் சொன்னக்குடி அனைத்தையும் இழந்து தெருவில் நிற்கும் என்பது குறிப்பு. இவற்றிலி ருந்து நாம் தெரிந்து கொள்வது: மக்களால் நேரிட்ட அறமற்ற செயலுக்குத் தெய்வத்தை நாடுவது வழிவழியாக இருந்து வரும் நம்பிக்கையாகும். அரசன் அன்று கொன் றால் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி யன்றோ? உடல் ஊனமுற்றோர்: மணிமேகலையில் வரும் ஆபுத் திரன் கதையை நாம் அறிவோம். இப்புண்ணியப்பெரு மகன் தான் தமிழகத்தில் முதன் முதலாக உடல் ஊன முற்றோரின் வாழ்வைக் கண்டறிந்து அவர்கட்கு உதவி யவன். அந்தக் காலத்தில் வைதிக அந்தணர்களை எதிர்க்க எதிரம்பு கோத்தவன் இப்பெருமகன்தான். இக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து அண்மைக் காலத்தில் மறைந்த தந்தை பெரியாரைப் போன்றவன் அக்காலத் தில் வாழ்ந்த ஆபுத்திரன். தந்தையாலும் பார்ப்பன 62. விவேக சிந், 94