பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் நீதி 271 சமூகத்தாலும் கைவிடப்பெற்ற ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ணத் தொடங்கினான். அந்தணர் பதியிலுள்ளார் யாவரும் அவனை ஆகவர் கள்வன் என்று இகழ்ந்து அவனது கடிஞையில் கல்லிடலாயினர். அதனால் அவன் வேறு புகலின்றித் தென்மதுரையை அடைந்து சிந்தா தேவியின் கோயிலின் முன்புள்ள அம்பலத்தில் தங்கிக் கொண்டு கையிற் கடிஞை யேந்தி மனைதோறும் ஐயம் ஏற்று வந்த உணவை, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருகஎன்(று) இசைத்துடன் ஊட்டி" அவர்கள் உண்டு எஞ்சியதனையே தான் உண்டு பிச்சை யோட்டைத் தன் தலையணையாக வைத்துக் கொண்டு அவ்வம்பலத்திலே நாள்தோறும் இரவில் கண்படை புரிந்து காலங்கழிப்பானாயினான். பெளத்தர்கள் பள்ளிகள் நிறுவி கல்வி கற்பித்தும், மருத்துவ மனைகள் அமைத்து நோய் தீர்த்தும் தம் சமயத்தைப் பரப்பி வந்தனர். கிறித்தவர் களும் ஓரளவு இம்முறையைக் கையாண்டு சமயத்தைப் பரப்புகின்றனர். அண்மைக் காலமாக இராமகிருஷ்ண மடம் ஒரளவு இப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதைக் காண்கின்றோம். அடுத்து உடல் ஊனமுற்றோரை ஆதரித்து வந்த செய்தி ஆமாத்தூர் (திருவாமாத்துனர்)." கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றால் அறியக் கிடக்கின்றது. இத்திருக் கோயிலில் 16 குருடர்கள் நியமிக்கப்பெற்று நாடோறும் 63. மணிமேகலை-ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை - அடி 111 - 113, 64. ஆமாத்துர்: விழுப்புரத்திலிருந்து 4கல் தொலை விலுள்ள ஒரு சிவத் தலம். தேவாரம் பாடிய மூவர் பாடல்களையும் பெற்ற தலம்.