பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霞季 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்ற நூற்பாவால் தெற்றென அறியலாம். காதலின் பால் துய்த்த காம வின்பம் நிறைந்து கடைக் கொண்டு வாழ்நாள் எல்லையின் நடுக்காலத்தில் தமக்குக்காவலாய்: அமைந்த தம் புதல்வரோடு கூடியிருந்தும், தாம் அது காதும் செய்து போந்த அறத்தை இனித் தாம் செய்ய லாகாமையின் தமக்காக அவ்வறத்தைச் செய்யும் சுற்றத் தாருடன் அமர்ந்தும் குடும்பத் தலைமகனும், தலை மகளும் சிறந்ததாகிய தவத்தில் தமதுணர்வினைப் பயிலச் செய்தல் தாம் அதுகாறும் செய்து போந்த காதல் மனை வாழ்க்கையின் பயனாகும் என்பது இதன் கருந்து. இதி விருத்து நெஞ்சினால் துறத்தலே துறவு என்பது அறி: யப்படும். ஒவ்வொருவருக்கும் இத்தவ ஒழுக்கம் இன்றியமை யாதது என்பது தொல்காப்பியரின் கருத்து. 'அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே' என்பது நன்னுரல் விதி. வழி வழியாக தமிழர்கள்பால் மரபாக வழங்கி வந்த கருத்தே இலக்கணத்தில் நூற்பா வடி. வில் காணப்பெறுகின்றது. வடமொழிவாணர்கள் இக் கருத்தையே தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறுவர். இந்த நான்கு பொருள்கள் இன்பம் ஒன்று நீங் கலாக ஏனை மூன்றையும் முன்னோர் புறப்பொருள் என்று வழங்கினர், சுருங்கக் கூறின் இன்பம் அறம்' என்றும் பொருள் 'புறம் என்றும் கூறி விடலாம். பொருளை ஒழுங் காகப் பயன் படுத்துவதனால் பொருளை நுகரும் இன்பத் தினும் சிறந்த பேரின்பமாகிய வீடு பேறு உண்டாதலின் ஒழுங்கு முறை என்னும் அறமும், அதன் பயனாகிய வீடும் பொருளோடு சேர்த்துப் புறப்பொருள்' என வழங் கலாயின. இன்பம் என்பது வெறும் பொருளை மட்டும் நுகரும். இன்பமாக இருப்பின் அதுவும் புறப்பொருள் என்றே வழங். 8. நன்னுரல் -10