பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝7愛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, திருப்பதிகம் விண்ணப்பிக்க (தேவாரம் ஒதவும்) ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. இவர்கட்குக் கண்காட்டுவார் ( = விழிப்பார்வையுடைய வேறு இருவர்) வழித்துணையாக அவர்களைக் கையிற் பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப் பட்டிருந்தது. இதைக் கல்வெட்டு விரிவாகக் கூறுகின்றது. சுமார் 800 ஆண்டுகட்கு முன்னரே திருக் கோயில்களில் குருடர்களை இவ்வாறு, தமிழ் மன்னர்கள் ஆதரித்த செய்தி இக்கால அரசுக்கும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. இன்று உடல் ஊனமுற்றோர் நிலைமை ஒரு சமூகப் பிரச்சினையாக எழுந்து அதனைத் தீர்ப்பதற்கு அரசே முன் வந்துள்ளது. வெள்ளையர் ஆட்சியிலேயே நம் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில செவிட்டுஊமையர் - குருடர் பள்ளிகள் இருந்து வந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு இவர்கட்காக மருத்துவ நிலை யங்கள், பள்ளிகள் பெரிய அளவுகளில் நிறுவப்பட்டுச் சிறப் பாக நடைபெற்று வருகின்றன. இவர்கட்கென வேலை. வாய்ப்புத் திட்டங்களும் ஏற்படுத்தப் பெற்று நன்னிலை யில் இயங்கி வருகின்றன. காமராசர் ஆட்சியில் உயர் நிலைப் பள்ளிக் கல்வி இலவசக் கல்வியாயிற்று. சீருடைத் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் நடைமுறைப்படுத் தப்பட்டு அக்காலத்தில் ஒரே கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றியவரும் பின்னர் ஆறாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகச் சீருடனும் சிறப் புடனும் பணியாற்றிய தாமரைச் செல்வருமான் டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்களின் பொறுப் பில் இத்திட்டங்கள் அற்புதமாகச் செயற்பட்டு வந்தது. நாடாளுமன்றத்திலும் பாராட்டுதல் பெற்றது. காரணம் இத்திட்டத்தை முதன் முதலாகக் கண்டதும் தமிழகத்துக் காமராசர் அரசு திட்டம் நன்கு செயற்படக் காரண மாக இருந்தவரும் தமிழகத்தைச் சார்ந்த திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள். இத்திட்டமே பொன்மனச்