பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 27 ፰ செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச் சந்திரன் காலத்தில் சத்துணவுத் திட்டம் என்ற புதிய திருநாமத்துடன் மிகவும் விரிவுபடுத்த ப்பெற்று நன் முறையில் செயற்பட்டு வருகின்றது. உலக அறிஞர்களும் இதனைப் பாராட்டி வருகின்றனர். இத்தகைய சமூக நீதியை முதன்முதல் வழங்கியது தமிழக அரசு என்று எண்ணும்போது உண்மையிலேயே நாம் பெருமைப் படு கின்றோம். இன்று உடல் ஊனமுற்றோர் கல்வித்துறை, அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத்துறை, இருப்பூர்தித் துறை, அரசுப் பொறுப்பிலுள்ள தொழில் துறைகள் முதலிய வற்றில் முன்னுரிமை அளிக்கப்பெற்று வேலை வாய்ப்புகள் பெறுகின்றனர். பெரும்பான்மையோர் கையால் இயக்கப் பெறும் மூன்று சக்கர வண்டிகள் போன்ற வசதிகளையும் பெற்றுள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒர் ஆணும் ஒரு பெண்ணும் குருடர்கள். இவர்கள் இருவரும் ஆங்கிலத் தில் எம். ஏ. பட்டம் பெற்று அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றதை நான் அறிவேன். இருவரும் நல்ல பார்வையுடன் விளங்கி வங்கித்துறையில் பணியாற்றுபவர்களை முறையே வாழ்க் கைத்துணைவியாகவும் வாழ்க்கைத் துணைவனாகவும் அடைந்து நன்கு வாழ்வதை நான் அறிவேன். இவர்கள் இருவருமே ஆங்கிலத்தில் டாக்டர் பட்டத்திற்குப்(பிஎச்.டி) பதிவு செய்து கொண்டு ஆய்ந்து வருகின்றனர். இவர்கட்குச் சமூக நீதி கிடைக்காவிடில் இவர்கள் வாழ்க்கை நிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தே வருந்துவோம். இந்தச் சமூக நீதியால் எண்ணற்றவர்கட்கு நல்வாழ்க்கை அமைந்திருப்பதைக் கண்டு, கேட்டு மகிழ்கின்றோம். மதுதர்மமும் வள்ளுவர் அறமும்: ஒரு சாதிக்கொரு நீதி’ வழங்கும் மதுதர்ம சாத்திரமும் வடமொழியில் திகழ் அ. இ. அ-18