பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை கின்றது. அதில் சில பகுதிகள் இந்து சட்டத்தில் (Hindu Law) இடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றனர். ஆனால் ஒரு சாதிக்கொரு நீதி ஏட்டளவில்தான் உள்ளது; நடை முறைப்படுத்தப்பெறவில்லை. ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்(972) என்ற வள்ளுவர் மொழி சாதி வேற்றுமையை ஒழிக்கவல்ல திருவாழியாக அமைந்திருந்தும் அது சரியாக பயன் படுத்தப் பெறவில்லை. வள்ளுவரின் அறவுணர்வு அடிப்படையில் அமைந்திருக்கும் நீதியை நன்குணர்ந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும் தமது மனோன் மணியத்தில், வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மதுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி." என்று முத்தாய்ப்பாகக் குறித்து நம்மிடையே ஒருவித விழிப்புணர்வை ஊட்டினார். இன்று திருக்குறள் பற்றி அதிகமாகப் பேசப் பெற்றும் எழுதப் பெற்றும் வருகின் றது. ஆனால், சிறிது கூட நடைமுறையில் இல்லாதது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது. பேரறிஞர் அண்ணா வின் ஆட்சியில் கலப்பு மணம், சீர்திருத்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றது சாதியொழிப் புக்கு ஒலிக்கப்பெற்ற சாவு மணியாகும். பொன்மனச் செம்மல் ஆட்சியில் தெருப்பெயர்களில்தான் சாதி ஒழிந் தது! வாழ்கின்றவர்களின் பெயர்களில் கை வைத்தால் என்ன நிலை உருவாகும்? எத்தகைய மின் அதிர்ச்சியைத் தரும்? என்று அஞ்சியே அதில் அவர் கை வைக்கவில்லை. 64. மனோன்மணியம் : தமிழ்த்தெய்வ வணக்கம் தாழிசை 11.