பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - நீதி 275 சாதி ஒழிப்பு நீக்கப் பெற்று, சாதி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்குவது போன்ற விதிகள் அகற் றப்பெறும் காலத்தில்தான் சமூக நீதி சரியான முறையில் வழங்கப்பெற்றதாகும். ஆனால் வேலை வாய்ப்புக் காலத்திலும் தேர்தல்கள் நடைபெறும் காலத்திலும்தான் "சாதிப்பற்று கோரத் தாண்டவமாடுவதைக் காண்கின் றோம். தொகுதிகளில் பேராளர்களைச் சாதி அடிப்படை .யில் நிறுத்தி மறைந்து போக வேண்டிய ஒரு நியதியை நினைவூட்டி நாட்டுக்கும் சமூகத்திற்கும் என்றும் நீங்காத அநீதியை எல்லாக்கட்சிகளுமே இழைத்து வருவது அறிஞர் உலகத்திற்கு மிக்க வருத்தத்தைத் தருகின்றது. வருந் தத்தக்க இன்னொரு செய்தி பிற்போக்குச் சாதியாரின் பட்டியல் அநுமார்வால் போல நீண்டுகொண்டே வருவ தாகும்! இத்தகைய அநீதிமுறைகள் நீங்கினால்தான், எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஒ ரினம் எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஒர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியாரின் கனவு நனவாகும்; அப்பொழுதுதான் நாட்டு விடுதலைபெற்ற நாம் சாதி ஒழிப்புத் திட்டத்தில் சாதி விடுதலையும் பெற்றுச் சமூக நீதியும் பெற்றவர் களாவோம் என்று கூறி இப்பொழிவைத் தலைக்கட்டு கின்றேன்.