பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

逻母爵 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பெரியோர்களே, செந்தமிழ்ச் செல்வர்களே, வணக்கம். இன்று நடைபெறுவது மூன்றாவது பொழிவு. நேற்றைய பொழிவில் தமிழ் இலக்கியங்களில்நீதி’ என்ற பொருள்பற்றிச் சிந்தித்து மகிழ்ந்தோம். இன் றைய பொழிவில் தமிழ் இலக்கியங்களில் முறைமை’ என்ற பொருள்பற்றிச் சிந்திக்கப் போகின்றோம். தொல் காப்பியம் சொல்லதிகாரத்தில் இயற்கையின் உடை மையின் முறைமையின் கிழமையின்' என்ற நூற்பாவில் (89) முறைமை" என்ற சொல் உறவு முறை என்ற பொருளில் வந்துள்ளது. ஆண்மை அடுத்த’ என்ற நூற்பா விலும் (162) முறைமை - முறை, உறவு முறை என்ற பொருளில்தான் காணப்பெறுகின்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மேலோர்முறைமை என்று தொடங் கும் நூற்பாவில் (31) முறைமை-தன்மை என்ற பொருளி லும், அன்னை என்னை என்று தொடங்கும் நூற் பாவில் (242) முறைமை-வழக்கு, நெறி முறை என்ற பொருள்களிலும் வந்துள்ளதைக் காணலாம். மேலும், அதே பொருளதிகாரத்தில் கற்பும் காமமும் (150) என்று தொடங்கும் நூற்பாவில், முகம்புகல் முறைமையில் கிழவோர்க் குரைத்தல் (5) என்ற அடியில் முறைமை - தன்மை என்ற பொருளிலும் வந்துள்ளதைக் காணலாம். பரிபாடலில் (11), முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட (82) என்ற அடியில் முறைமை - நோற்கும் முறைமை, நோன்பு செய்யும் முறை என்ற பொருள்களில் அமைந்துள்ளது. புறநானூற்றில் (39), முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு(10)