பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 芷宽 கும். ஆனால் அகப்பொருள் என்று கூறப்பெறும் இன்பமா வது, உயிரறிவின் அன்பை நுகரும் இன்பமாதலின் அது. தனியாக அகம் என வழங்கலாயிற்று. வீடு என்னும் நிலை, சொல்லுக்கும் பொது உணர்வுக்கும் எட்டாதி உணர்விறத் சிறப்பு உணர்வு நிலையாகக் கருதப் பெறு: கின்றது. அது அறவொழுக்கத்தின் பயனாக உண்டவதாயுள் ளது. ஆதலால் அதனை அறம் என்பதிலேயே அடக்கிக் காரனவகையாற் சான்றோர் கூறினர். ஆதலால் நூல் களால் விளக்கிப் பேசக்கூடிய உறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று என்பது வழக்காக அமைந்து விட்டது. வாழ்க்கையின் பல நிலைகளும் இவ்வாறு இம்மூவகைப் பாகுபாட்டில் இனிதமைந்து நூல் களில் அங்கங்களாக விளக்கப்பெற்றுவருகின்றன. இவ்வாறு விளக்கப்படும் நூல்களுள் தனிப் பெருமையும் சிறப்பும் உடையது திருக்குறள், தமிழ் மறை என்றும் போற்றப் பெறுவது. இதனைச் சிறந்த அறநூல் என்று வழங்குவது. முற்றிலும் பொருந்தும். 。。三。兹 > 、 空、 இவ்விடத்தில் ஒருமுக்கிய கருத்தை நினைவிற் கொக புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்று மணிவாசகப் பெருமான் கூறும் மக்களே வாழ்க்கைச் சிறப்புடையவர்கள். இவ்வாறு மக்கள் வாழும் வாழ்க்கை சிறப்புற்று விளங்குவதற்குக் காரணம் என்ன? மனிதனிடம் மனம் என்னும் சிறந்த கருவி அமைய பெற்று அதை அவன் 9. திருவா. சிவபுராணம்-அடி 26-31