பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்யென்பார். fமுறைதிறம்ப - நீதிதவற1. ஒருவனுக்குக் கொடுத்த பொருளை வேறொரு வனுக்குக்கொடுத்தல் முறையாகாது’ என்பது அறநூல்விதி: இப்படியிருக்க, மன்னவன் இராமனுக்குக் கொடுத்த அரசுச் சுமையை கைகேயிக்கு எவ்வாறு கொடுக்கலாம்? இந்தக் கொடையில் மூத்தவனுக்கு உரியதை இளையவனுக்குக் கொடுத்தலும், முன்னதாக ஒருவனுக்குக் கொடுத்ததை மீட்டும் மற்றொருவனுக்குக் கொடுத்தலும் ஆகிய இரண்டு முறைகேடுகள் இச்செயலில் அடங்கியுள்ளன. ஒருகால் மன்னர்க்கு ஒருவகை அறம், மற்றவர்க்கு மற்றொரு வகை அறம் உண்டு போலும் - என்கின்றனர். மக்கள் இப் படிக் கூறுவதில் சட்ட நிபுணர்களான ஜேத்மாலனியையும் பாக்கிய வாலாவையும் கூட விஞ்சி நிற்கின்றனர். மேலும், "மூத்தவனிடம் குறை - குற்றம் - ஏதேனும் இருந்தால் இளையவன் உலகையாளலாம்’ என்பது அறநூல் வழக்கு (Succession right). Ep # 3105Gaðrir, 'தன்னேரில்லாத தலைமகன்'. அத்துடன், புனையு மாமுடி புனைந்திந்த நல்லறம் புரக்க நினையல் வேண்டும்.நான் நின்வயிற் பெறுவது ஈதென்றான்” என்றதனை நோக்கி முன்னே கொடுத்த பொருள் என் கின்றனர். நினைத்தலும் சொல்லலும் செய்தலோடொக்கு மாதலால்,கொடுக்க நினைத்ததனையும் சொன்னதனையும் கொடுத்து என்கின்றனர். 'இராமனுக்கு அரசுப்பொறுப்பு கொடுத்தால் வாய்மை பிழைக்கும் என்ற கைகேயிக்கு மாறாக, பரதனுக்குக் கொடுத்தால் வாய்மை பிழை யாதோ? என்கின்றனர். வேண்டும் போது இரண்டு AASAASAASAASAASAASAASAAAS 3. மந்திர : 71