பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 285。 வரங்கள் தருவேன்' என்று தசரதன் முன்பு சொல்லி யிருந்தாலும் அரசுப் பொறுப்பை இராமனுக்குக் கொடுப் பதாகச் சொல்லிவிட்ட பிறகு அதைக் கைகேயி கேட் டால் அரசுப் பொறுப்பு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தாயிற்றே!?’ என்றல்லவோ மன்னன் மறுமொழி தந்தி ருக்கவேண்டும்? என்பது நகரத்தவரின் உட்கோள். இப்படி முடியாட்சி காலத்திலேயே மக்களிடையே குடியாட்சி முறை அரும்பத் தொடங்கி விடுகின்றது என்பதை இக் காவியத்தில் காணலாம். நகர்நீங்கு-196. நிறைமக வுடையவர் நெறிசெல் ஐம்பொறி குறைமக குதையினும் கொடுப்ப ராம் உயிர் முறைமகன் வனம்புக மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமணம் இரும்பென் றார்சிலர் (முறைமகன் - முறைமைக்குரிய மூத்தமகன்) வனம் புகு-28 புக்குறை விடநல்கிப் பூசனை முறைபேணித் தக்கன கனிகாயுந் தந்துரை தருமன்பால் தொக்கநன் முறைகூறித் தூயவன் உயிர்போலும் மக்களின் அருளுற்றான் மைந்தரும் மகிழ்வுற்றார். (பூசனை முறைபேனி-அதிதிக்குச்செய்யவேண்டிய பூசையை முறைப்படி புரிந்து; முறை - சிறந்த முகமன் i இங்குப் பரத்துவாச முனிவன், இராம லக்குமணர்களை உபசரித்ததைக் காட்டும் பாடலில் இச்சொற்கள் அமைந் பள்ளி படை-1,43, தந்தை தன்வயின் தருமம் யாவையும் முந்து நூலுளோர் முறைமையின் முற்றினான்.