பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈86 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை ஈமக்கடன் முடிந்த பின்னர் பரதன் தன் திருமாளி கையை அடைந்து பத்து நாட்கள் வரை செய்ய வேண் டிய சடங்குகளை (தசாஹம்) முடித்த விவரம் கூறுவது இப்பாடல். இங்கு முறைமையின் (சாத்திர நூலில்) கூறி புள்ள முறைப்படி என்ற பொருளில் இச்சொல் அமைந் திருப்பதைக் காணலாம். திருவடிசூட்டு-100; கானகத்தில் அரசர் முதலியோர் சூழ்ந்திருக்க, பரதன் கொண்டிருந்த விரத வேடத்தைக் குறித்து பரதனை இராமன் வினாவும்போது பரதன் தன் கருத்தை ஆறு பாடல்களில் தெரிவிக்கின்றான். அவற்றுள் ஒரு பாடல் இது. நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? fமுறை முறைமை) கற்பு தெறியினின்றும் விலகிய மகளிரின் குணம், பொறுமையினின்று நீங்கிய தவ ஒழுக்கம், கருணை வழி யினின்று விலகிய தருமம் - இவை யாவற்றினும் தொல் லையோர் முறையின் நீங்கிய அரசு மிகக் கொடியது" என்கின்றான் பரதன். மூத்தவர்க் குரித்து அரசு எனும் முறைமையின் தவறிய அரசியல் தான் கொள்ளத்தக்க தன்று என்று உணர்த்துகின்றான். இந்தக் காரணத்திற் காக இளங்கோ அரச பதவியை வெறுத்து, துறவறம் பூண்டு இளங்கோ அடிகள் ஆயினர். இங்குப் பரதன் "தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி’ (குகப்-35) ஆயிரம் இராமர்களைவிட உயர்ந்தவனா கின்றான்.