பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 287 பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமன் பரதனது கொள்கையைத் தவறு என்று ஏழு பாடல் களால் காட்டுவான். அவற்றுள் ஒன்று, திருவடி சூட்டு-105 முறையும் வாய்மையும் முயலும் திேயும் மறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம் துறையுள் யாவையும் சுருதி நூல்விடா இறைவன் ஏவலால் இயைவ காணவா. (முறை - நல்லொழுக்கம்; வாய்மை - சத்தியம்; நீதி - நியாயம், அறன் - தருமம், சுருதிநூல்-வேத சாத்திரம்; இறைவன் - அரசன்) இப்பாடலில் அறம், நீதி, முறைமை என்ற மூன்று கருத்து களும் அமைந்து உள்ளமை கண்டு மகிழத்தக்கது. முறை {மை).நல்லொழுக்கம் என்ற பொருளிலும், நீதி-நியாயம் என்ற பொருளிலும், அறன், தருமம் என்ற பொருளிலும் அமைந்துள்ளன. முறை(மை), நீதி, அறம், ஆகியவை நிலை நிற்பதன்பொருட்டு இறைவன் இருத்தல் இன்றி யமையாதது என்று காட்டுவான் இராமன். திருக்குறள் :இறைமாட்சி' யில் உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறை' என்றார். திருவுடை மன்ன ரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார்' என்று பரிமேலழகர் உரைத் ததையும் இறை” என்பதற்குக் கொள்ளல் பொருத்த முடையது. இராமன்- பரதன் பேச்சிடையே வசிட்டன் குறுக்கிட்டு முந்தையோர் முறையை ஆறு பாடல்களால் எடுத்துக்காட்டித் தன் ஆணையால் அரசுப் பொறுப்பை அங்கீகரிக்குமாறு வேண்டுகின்றான். இதற்கு இராமன் மூன்று கவிகளால் மறுமொழி தருகின்றான். வசிட்டன் வாயடைத்துப்