பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, போக, பரதன் தன் முடிவைக் கூறுகின்றான். அவற்றுள் ஒரு பாடல்: திருமுடிசூட்டு - 129. முனிவனும் உரைப்பதோர் முறைமை கண்டிலம், இனியென இருந்தனன்: இளைய மைந்தனும் "அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடுநான் பனிபடர் காடுடன் படர்தல் மெய்யென்றான் fமுனிவன்; வசிட்ட முனிவன்; முறைமை நீதி; இளையமைந்தன்-பரதன்; பனிபடர் - பனிமிக்க; மெய்-உண்மை! இந்தப் பாடலில் முறைமை - நீதி என்ற பொருளில் வத்துள்ளது. இராமன் கூறின நியாயத்தைக் கேட்ட வசிட் டன், இனி இதற்கு மாறாகச் சொல்வதொரு நீதியைக் காணோம்' என்று வாளா இருந்தான் என்கின்றான். கவிஞன். மேலும், கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருங் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடி ஏழிரண் டாண்டின் வாஎன்று ஏவினன் அரசன்......... 4. |பூழி - புழுதி) என்ற ஆணையைக் கைகேயினிடம் அவளது அந்தப்புரத் திலிருந்து பெற்றுக் கொள்கின்றான் இராமன். 4. அயோத்தி : கைகேயி சூழ்வினை - 107