பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 289 மன்னவன் பணியன் றாகில் தும்பணி மறுப்ப னோஎன் பின்னவன் பெற்ற செல்வம் ஆடியனேன் பெற்ற தன்றோ? என்னிதின் உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்’ (பின்னவன் - தம்பி; இதின்-இதனினும் மேலான; என்: யாது; உறுதி - நன்மை) என்று கூறி கைகேயியையும் தசரதனையும் வணங்கி விட்டு அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கோசலையின் திருமாளிகைக்கு வருகின்றான். கோசலை கோயில் புக்கான்' என்கின்றார் கவிஞர். நீராடாமல் தலையில் கிரீடம் சூட்டிக் கொள்ளாமல் வந்த இராமனை நோக்கிக் கோசலை (சக்கரவர்த்தி) நினைத்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?’ என்று வினவ, அதற்கு இராமன் கூறிய மறுமொழி: செங்கை கூப்பிதின் காதல் திருமகன் பங்க மில்குணத் தெம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்." என்பது. இதனை மகிழ்ச்சி பொங்கக் கூறுகின்றான்! இதன் பிறகு அன்னை கோசலை கூறும் மொழியில்தான் * முறைமை என்ற சொல் வருகின்றது. முறைமை யன்று என்பது ஒன்றுண்டு அல்லது நிறைகு ணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவி லன் எனக் கூறினள் நால்வர்க்கும் மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினாள். . டிெ. டிெ - 110 அயோத்தி - நகர் நீங்கு, 3 * டிெ : 4 . டிெ ைெடி : 5 த.இ.அ-19