பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ö தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை, இங்கு முறைமை' என்பது அரசநீதி’, மரபுமுறை என்ற பொருள்களில் வந்துள்ளது. மூத்தவன் இருக்க இளைய வன் அரசு ஆளுதல் இராச நீதி அன்று என்கின்ற ஒரு குறை மாத்திரம் உண்டு என்பதல்லாமல் எல்லா விதத்திலும், பரதன் ஆளத் தகுதி பெற்றவன். நின்னினும் நல்லன்” என்று கூறுகின்றாள். இந்த அரசநீதிதான் (Principle of Succession) வழிவழியாக நம் நாட்டில் வழங்கி வருவது. மூத்தவன் குணக் கேடனாக இருந்தாலன்றி மற்றைப் போது மூத்தவனுக்கே முடிசூட்டுதல் அரச முறை ஆயிற்றே" என்று சுட்டிக் காட்டுகின்றாள் கெளசல்யா தேவி, இன்னும் இந்தச் சொல், முறைமையின் எய்தினர்’ என்ற இடத்தில் அரச மண்டபத்திற்குச் செல்ல வேண்டிய முறைப்படி என்ற பொருளில் வந்துள்ளது; அதாவது: “நடைமுறை என்ற பொருளில் வந்துள்ளதாகக் கருதலாம். முறைதெரிந் தொருவகை முடிய நோக்குறின்.'" என்ற இடத்தில் (பரதனை உலகாளுமாறு வசிட்டன் சொல்லும் இடம்) முறை என்பதற்கு வழி முறை” என்றும், அரசநீதி’ என்றும் பொருள் காணமுடிகின்றது. முறை முறைமை' என்ற சொற்கள் பரியாயமாகவே: வழங்குவதையும் இலக்கியங்களில் காண்கின்றோம். முறைமையால் எற்பயந் தெடுத்த மூவர்க்கும் குறைவிலா என்நெடு வணக்கம் கூறி! 9. அயோத் : மந்திரப் : 14 10. டிெ ஆறுசெல்.9 11. டிெ தைலமாட்டு : 38