பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 29 # என்ற இடத்தில் (இராமனைப் பின்பற்றிச் சென்றவர் களைத் திரும்பிச் செல்லுமாறும் தந்தை முதலி யோரிடத்துச் சொல்லுமாறும் இராமன் கூறிய இடத்தில்) "முறைமையால் என்பதற்கு மரியாதை முறை என்ற பொருள் காணமுடிகின்றது. இந்த முறைமை என்ற சொல்லின் பொருளையறிய இலக்கியச் சுற்றுலா வை மேற் கொண்டாலும் பயன் அளிப்பதாகத் தெரியவில்லை. இதற்குச் சற்று நேர்மாறாக ஒரு கருத்து புற நானூற்றில் காணப்பெறுகின்றது. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டில் (புறம் 183) 'அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் (அடி 7) என்ற அடியில் மூத்தோன் அரசு கட்டில் ஏறுதல் என்ற முறை மையை நீக்கி அறிவுடையவனுக்குத்தான் அத்தகுதி உண்டு என்று குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம். பாடல் முழுவதையும் ஈண்டுத் தருகின்றேன். உற்று.ழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே: பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்.மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே(188). (உறுபொருள் - மிக்க பொருள்; பிற்றை நிலை வழி பாட்டு நிலைமை; முனியாது - வெறாது; சிறப்பின்பால் கல்வி விசேடம், ஆறு - நெறி; கீழ்ப்பால் - கீழ்க்குலம்; மேற் பால் - மேற்குலம்) இந்தப் பாடல் கல்வியின் பெருமையையும் இன்றிய மையாமையையும் விளக்குவது. பெற்ற தாய்க்குத் தன்