பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வயிற்றிற் பிறந்த பிள்ளை எத்துணைப் பொலிவற்றிருப் பினும் மனவெறுப்பு உண்டாகாது; திருவள்ளுவர் 'ஈன் றாள் முகத்தேயும் இன்னாதால் (களி)” என்று யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னது என்றார். அத்தகைய தாயும் தன் மகன் கல்வியில்லாமையால் கடையனாயினான் என்பது கான அருவருப்புக் கொள்வாள் என்பதை 'தாயும் மனம் திரியும்' என்றார் கவிஞர், தம்மில் தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது (68). என்பது, பெற்றோர்க்கும் கற்றோர்க்கும் நோக்கமாதலின் மாநிலத்திற்கு இன்ப வாழ்வு வழங்கும் அரசு முறை அறிவுடையோனையே நோக்கி இயங்கும் என்பதை 'அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்ற சொற். றொடரால் குறிப்பிட்டுள்ளார். அறிவுடையோன், படை வேண்டுவழி வாள் உதவலும், வினை வேண்டுவழி அறிவுத வலும்’ (புறம்-179) கடன் என்பதை வடநெடுந்தத் தனார் நாலை கிழவன் நாகன்மீது பாடிய பாட்டால் அறியலாம், நாலை கிழவன் நாகன் என்பவன் பாண் டிய மறவன். இந்தப் பாடலில் மூத்தோனே அரசாளும் உரிமை பெற்றவன்' என்ற கருத்துக்கு மாறான கருத்து அமைந்துள்ளது. இன்னொரு புறப்பாட்டில் (புறம்-75) தோசையைத் திருப்பிப் போட்டாற்போல பண்டைய கருத்தே நிலை நாட்டப்பெறுகின்றது. சோழன் நலங்கிள்ளி உறையூரை ஆண்டு வருகையில் சான்றோர் பலர் அவன் அரசவையில் கூடியிருக்கும் நேர்வு ஏற்பட்டது. அப்போது அரசுமுறை யின் இயல்புபற்றிய பேச்சு எழுந்தது. அப்பொழுது அரசனே, 12. குறள்- 923