பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 29.3 மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென்ப பால்தர வந்த பழவிறல் தாயம்' Iசுற்றம் - எமன், உய்த்தென - கொண்டு போயினா னாக; பால்தரவந்த - விதியால் பெற்ற பழவிறல் தாயம் - பழைய வெற்றியால் உண்டான அரசுரிமை; என்று பேச்சைத் தொடங்குகின்றான். இந்தப் பேச்சில் மூத்தவனே அரசு முறை பெறுகின்றான் என்ற நியதி. முறைமை குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம். இந்த நியதியை - முறைமையை - சிவப்பதிகாரத்திலும் காண்கின்றோம். வரந்தருகாதையில் இக்கருத்தை இளங்கோ அடிகள் மிக அற்புதமாகத் தேவந்தியின் வாக் கில் வைத்து வழங்குகின்றார். வழங்கும் சந்தர்ப்பத்தைத் தெளிவாக அறிந்து கொண்டால் இக்கருத்தின் அருமைப் பாட்டை உணர்ந்து அநுபவிக்க முடியும். செங்குட்டுவன் தான் அமைத்த பத்தினிக்கோட்டத்திற்கு மானியம் அளித்து நித்திய கைங்கரியம் நடைபெற ஏற்பாடு செய் கின்றான். பின்னர், கோட்டத்தை வலம் வந்து சந்நிதியில் செங்குட்டுவன் நிற்கின்றான். அப்பொழுது ஆங்குக் குழுமி யிருந்த ஆரிய மன்னர்கள், குடகக் கொங்கர், மாளுவ வேந்தர், இலங்கைக் கயவாகு வேந்தன் ஆகியோர் பத் திணிக் கடவுளை நோக்கி யாங்கள் எங்கள் நாட்டில் செய்யும் வேள்வியிலும் வந்து அருள் செய்க என்று வேண்டுகின்றனர். அப்போது நீங்கள் விரும்பியவாறே வரந் தந்தேன்’ என ஒரு குரல் எழுந்தது. அதன் பின்னர் செங்குட்டுவன் மாடலனோடு வேள்விச் சாலை செல்லு கின்றான், அருகில் நின்ற இளங்கோ அடிகள் கண்ணகிக் கோட்டத்திற்கு ஏகுகின்றார். அவர்முன் பத்தினிக் கடவுள் தேவந்தியின் மேல் ஆவேசித்து அவருடைய துறவின் வரலாற்றைக் கூறுகின்றாள். வஞ்சிமூதுார் திருமாமணி மண்டபத்தில் செங்குட்டு வனும் இளங்கோவும் தந்தையுடன் இருக்கும்போது