பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏器 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி முறைமை பண்படுத்தவும் பயன்படுத்தவும் வல்லவனாக விளங்குவதே காரணமாகும். உலகிலுள்ள உயிர்வாழ் பிராணியிடம் அமைந்திருக்கும் மூளையில் மனித மூளை நாற்பத் தொன்பது அவுன்சு எடையுள்ளது. யானையின் மூளை இந்த அளவு உள்ளது. ஆனால் மனிதப் பெரு மூளையில் இebrum) பலமடிப்புகள் அமைந்திருப்பதைப் போல் ன்னையின் மூளை அமைந்திருப்பதில்லை. இந்த மனம் பண்படும் இடம் காதல் வாழ்க்கை மனம் - கன்படும் இடம் பொது வாழ்க்கை மனம் வாழும் இடமே தனி வாழ்க்கை. வள்ளுவப் பெருந்தகை காமத்துப் பாலில் காதல் வாழ்க்கையை விளக்குகின்றார். அவர் காதல் கொண்டவரிடம் நன்றாகக் கலந்தும் கரைந்தும் 1ம்ை பண்படும் வகையைத் தெளிவாக விளக்குகின்றார். பொருட்பாலில் பொதுவாழ்க்கையைத் தெளிவு படுத்து கின்றார். மனிதன் அறிவின் வழியாக இயங்கிப் பொதுக் கடமைகளைப் புரிந்து மனம் பிறருக்கும் தனக்கும் பயன் படும் வகையைத் தெளிவுறுத்துகின்றார். அறத்துப்பாலில் தனி வாழ்க்கையை வரையறுத்து. அறத்தைப் போற்றி மனம் தூய்மை பெற்று வாழும் வகையைத் தெளிவாகப் பேசுகின்றார். 'அறம் என்ற சொல் விரிந்த பொருளையுடையது. மனிதன் புரியும் நற்செயல்கள் அனைத்தையும் இதில் அடக்கிக் கூறலாம். தமிழர் வாழ்க்கையில் - அகவாழ்க் கையிலும் புறவாழ்க்கையிலும் அறம். கடைப்பிடிக்கப்பட்டு வருதலைத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பாகவும் தெளி வாகவும் புலப்படுத்தியிருப்பதைக் கண்டு மகிழலாம். அறம்' என்ற சொல் நீதியைக் குறிக்கும்; அதற்கு மேலும் பல பொருள்களைத் தரும். இதனை நசஹைய சொற் பொருளில் விளக்க முயல்வேன். 'அறம் என்ற சொல் இடத்திற்கேற்ப பல பொருள் களில் வழங்கப்படுகின்றது. கருத்துப் பொருள் இப்படிப்