பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நிமித்திகன் ஒருவன் வருகின்றான். சோதிடன் ஒருவன் நம்மைக் காணும்போது சும்மா இருப்பதில்லை; கோள் கள் இயக்கத்தைப்பற்றி ஏதாவது பேசிக் கொட்டி உளறு. வான். அங்ங்னமே பழங்காலத் தமிழ்ப் புலவர் ஒருவரும் நம்மிடையே வரும்பொழுது ஏதாவது இலக்கணக் குறிப் புகளை உதிர்ப்பார்; இவர்கள் தம்முடைய 'சரக்குகளை’ தேவையில்லாத இடங்களில் எல்லாம் இறக்கி விலை கூறத் தொடங்குவார்கள். தலைச்சுமை தாங்கி தெருத் தெருவாகச் சுற்றி விற்றுக் கொண்டு வரும் சிறுவணிகர் கள் போலவும், வெறும் வாயை மெல்லுபவர்கட்கு அவல் கிடைத்தால் அதை மெல்லுவதைப் போலவும், இக்காலத்தில் பள்ளிச் சிறார்கள் மெல்லும் பிசினை (Chewing gum) மென்று தொலைப்பது போலவும் நிமித் திகன் பேசத் தொடங்குகின்றான். இளங்கோவை நோக்கி அரசு வீற்றிருக்கும் திருப்பொறி நின்பால் உளது என்று கூறுகின்றான். தமையனாகிய செங்குட்டுவன் இருக்க, இவ்வாறு முறைமை கெடச் சொன்னதற்கு அடிகள் அந் நிமித்திகனை வெகுண்டு நோக்க, தமையனுக்குத் துன்ப மும் மனத்தாங்கலும் நேரிடாதபடி குணவாயிற் கோட் கோட்டத்தில் துறவு பூண்டு வெற்றரசைத் துறந்து வீட் டரசைப் பெறுவதற்கு உரியவராகி விட்டனர். இதனைத் தேவந்தி வாக்காக, வஞ்சி மூதூர் மணிமன் டபத்திடை துந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை அரைசுவீற் றிருக்கும் திருப்பொறி உண்டெ'ன்று உரைசெய் தவின்மேல் உருத்து நோக்கி • கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்தன் செல்லல் நீங்க பகல்செல் வாயில் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கி சிந்தை செல்லாச் சேனெடுந் தூரத்து அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து’’’ 13. சிலப்: வரந்தரு காதை - அடி (173 - 182)