பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 2翌5 மனிண்டபம் - அத்தாணி மண்டபம்; தந்தைதாள் நிழல் - தந்தையிடம்; திருப்பொறி - வடிவுஇலக்கணம்: உருத்து நோக்கி - வெகுண்டுநோக்கி; கொங்கு-மணம்: தார் - மாலை; அல்லல் - துன்பம்; நீங்க - ஒழியு மாறு: பகல் செல்வாயில் - குணவாயிற் கோட்டம்: படியோர் - முனிவர்கள்; அகல் இடப்பாரம் - நிலம் தாங்கும் சுமை; அந்தமில் இன்பத்து அரசு - முடிவில் லாத இன்பத்தையுடைய வீட்டுலக அரசு, என்று கவிஞர் பெருமானே கூறுவதைக் காணலாம். மூத் தவன் இருக்க இளையவன் அரசோச்சுவது அடாதசெயல் என்பதைத் தெரிவிக்க சட்டி கட்டதடா, கை விட்ட தடா என்று துறவுக்கோலம் கொண்ட அருமைத் தம்பி யைக் காண்கின்றோம். பாராளும் வாய்ப்புப் பெற்றும் அதனைத் தீவினை என்ன நீந்துச். சிந்தனை முகத்தில் தேக்கும் பரதனை ஒத்தவராய் விடுகின்றார் இளங்கோ அடிகள். அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து' என்ற நிலையையும் பெற்று விடுகின்றார். அந்தமில் இன்பத்து அரசினைத்தான் பரிமேலழகர் தம் திருக்குறள் உரைப் பாயிரத்தில் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின்’ என்று குறிப்பிட்டார். சில சமயம் நீதி என்ற சொல் முறைமை என்ற பொருளிலும் ஆளப்படுவதை இலக்கியங்களில் காண முடி கின்றது. கம்பராமாயணத்தில் இதுபற்றிய ஓரிடத்தைக் காட்டுவேன். கைகளும் கால்களும் வெட்டுண்ட நிலை யிலும் கும்பகருணன் பெரும் போர் புரிகின்றான். தன் னுடைய பிளவுபட்ட வாயினால் - பகுவாயால் - காத துரம் நீண்டிருந்த மலைகளைக் கடித்து ஒடித்து எடுத்து மேன்மேலும் தன்னுள்ளிருந்து வெளிக்கிளம்புகின்ற காற் றினால் விரைவுடன் திக்குகளில் செல்லுமாறு ஊதுந் தோறும் அம்மலைகளினால் வானரப்படை இடியினால் உயிரொழியும் பிராணிகள்போல் உயிரொழிகின்றன.