பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைம்ை மேலும் மூங்கிலினால் நெருங்கிய மலையொன்றை வாயி னால் கவ்வி நாவினால் வானத்தைப் பொருந்த வளைந் தேந்தி வாயின் வலிமையினால் வெகுதுரம் செல்ல விசி எறிகின்றான். இதனால் கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவனான இராமபிரானும் அச்சத்தினால் கை நடுங்கப்பெறும் நிலையை அடைகின்றான்." இந்நிலை யில் அவன் தளர்வுறுகின்றான்; இனி வரம்பின்றி வாழ வேண்டியவனான தன் தமையன் இராவணனுக்கு உய் யும் வகை இல்லை என்பதை அறிந்து ஒப்பற்ற துயரை அடைகின்றான். அவனிடம் புதியதொரு நல்லுண்ர்வு எழுகின்றது. இராமனை நோக்கிச் சில கூறத் தொடங்குகின்றான். தன்னைச் சரணமாக அடைந்த ஒரு புறாவின் பொருட்டு தராசுத் தட்டில் ஏறின சிபியின் மரபில் வந்தவரே, அச்சக்கரவர்த்திபோல அன்பின் செயல்களையுடையவரான நீங்கள் அடியேனது பிரார்த் தனையினால் எங்களுடைய உறவினாலான தீவினையை ஒழித்து உன் பக்கத்தைச் சேர்ந்தவனாகிய என் அருமைத் தம்பி வீடணனுடைய உயிரைப் பாதுகாக்கக் கடவீர்”* என்று வேண்டுகின்றான். தொடர்ந்து, நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால் சாதியால் வந்தசிறு நெறியறியா என்தம்பி ஆதியாய்! உனையடைந்தான்; அரசர் உருக் கொண்டமைந்த வேதியா! இன்னம் உனக்(கு) அடைக்கலம்யான் வேண்டினேன்.'" 14. யுத்த. கும்பகருணன் வதை - 352, 353 15. டிெ 356 ് 6. ു. 357