பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் முறைமை 897 என்று கூறிச் சரண் அடைகின்றான். இங்கு திே என்ப தற்கு முறைமை” என்று பொருள் அமைந்திருப்பதைக் காணலாம். முதற் கடவுளே! அரசர் உருக்கொண்டு உலகத்துத் தோன்றிய அருமறையால் போற்றப்படுகின்ற கடவுளே! முறைப்படியே அமைந்ததான ஒப்பற்ற சிறந்த அறநெறியினலல்லாமல், அரக்கர் சாதியில் பிறந்ததால் உண்டாகும் அறநெறியல்லாத நெறியை அறியாதவன் என் தம்பி. அவன் உம்மை அடைக்கலமாக அடைந்துள் ளான். மீண்டும் அவனை அடைக்கலப் பொருளாகக் காத்தருள்க' என்று வேண்டுகின்றான். மேலும் நற்குணம் இல்லாத என் தமையன் தம்பியாயிற்றே என்று கருதி இரக்கம்கொண்டு விட்டிடான்; இவனைக் கண்டால் கொன்றிடுவான்; சிறிதும் அருள் செய்யான். ஆதலால், உம்பியைத் தான் உன்னைத்தான் அதுமனைத்தான் ஒருபொழுதும் எம்பி பிரி யானாக அருளுதி;யான் வேண்டினேன்’’’ என்கின்றான். முன்னர் முறைமை என்பது நீதி என்ற பொருளில் வந்துள்ளதைக் காட்டினேன் (திருமுடிசூட்டு 129) முறைமையும் நீதியும் ஒரே பொருளில் வருவ தைப் பல இடங்களில் காண முடிகின்றது. "பழமொழி யில் ஒரு பாடல். இது அரசியல்பு பற். றியது. சாலை மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்தனன் பின்றையும்-மேலைக் கறவைக்கன்(று) ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் 17. கும்பகருணன் வதை - 359