பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை முறைமைக்கு மூப்பு:இளமை இல்.: fமுறைமை - செங்கோன்மை) இப்பாடலை நேற்றைய பொழிவிலும் காட்டினேன். முறைமை - செங்கோன்மையை உணர்த்துகின்றது. மூப்பு, இளமை கருதி நீதி கூறலாகாது என்கின்றார் ஆசிரியர் ஆட்சிமுறை: நாடாளும் தலைவனுக்கு இன்றியமை யாது இருக்க வேண்டிய இயல்புகள் பல. அவன் அறநெறி யிலிருந்து வழுவாது ஒழுகும் முறைமையுடையவனாக இருத்தல் வேண்டும்: அறமல்லாத தீ நெறியை நீக்கும் முறைமையுடையவனாகவும் இருத்தல் வேண்டும்; வீரம் வழுவாத மானம் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு (384). என்பது வள்ளுவம், நாடாளும் மன்னன் - மக்களாட்சியில் பொறுப்புள்ள முதலமைச்சர், சபாநாயகர் போன்றவர்கள் குடி மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டியவர்கள். அவன் தீ நெறியில் ஒழுகினால் மற்றவர்கட்கு அதுவே துண்டு கோலாகவும் அமைந்து விடும். அவன் தலை வனாக இருப்பதால் அவனுடைய ஒழுக்கத்திற்கு நாடெங்கும் பரவும் ஆற்றல் உண்டு. அதுவும் செய்தித் தாள்கள், தொலைத் தொடர்புகள் (Telecommunications) மலிந்த இக்காலத்தில் அது பரவும் வேகத்தைச் சொல்லி முடியாது. ஆகவே தான் வள்ளுவர் உணர்த்தும் அறநெறி ஆட்சி புரிவோருக்கு கட்டாயம் வேண்டும்.மானம்வேண்டும் என்று கூறும் போது தலைவனின் தனி வாழ்க்கை பற்றிய 18. பழமொழி - 242.