பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை &身象 மான உணர்ச்சியைக் குறிப்பிட்டதாகக் கொள்வதற் கில்லை. அதனால்தான் மறன் இழுக்கா மானம் என்று வீரத்திற்கு ஏற்புடைய மானத்தைக் குறித்ததாகக் கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்கள் நாட்டின் மானமே தம் மானமாகக் கொண்டு ஆட்சி நடத்துதல் வேண்டும். நாட்டிற்கு உண்டாகும் பெருமையும் சிறுமையும் தம் முடையவை என்று கொள்ள வேண்டும். தம் தனி மானத்தை நாட்டு வாழ்க்கையில் புகுத்தி நாட்டு மக் களுக்குப் போர் முதலிய தொல்லைகளை விளைவித்தல் கூடாது. தம்மைக் குறை கூறினால் பொறுத்தலும் நாட்டைக் குறை கூறினால் புறக்கணிக்காமலும் உள்ள மானம் வேண்டும். தனி வாழ்க்கையில் தம் பகைவனாக உள்ளவனைப் பொருட்படுத்தாமல், நாட்டின் பகை வனாக உள்ளவனை அடக்கவும் திருத்தவும் முயற்சி எடுத்தல் வேண்டும். எதிர்க்கட்சிப் பொறுப்பிலுள்ளவர் கட்கும் இந்த உணர்வு வேண்டும். ஆட்சிப் பொறுப்பிலுள்ள வர்களைத் தனிப் பட்ட முறையில் குறை கூறாமல் நாட்டின் நன்மைக்கு உகவாத செயல்களில் இறங்கும் போது அவற்றினை எடுத்துக் காட்ட வேண்டும். பேச வையை இறைவன் திருமுன் என்று கருதி செயற்படுவது இருசாராருக்கும் நன்மை பயக்கும்; நாட்டிற்கும் நலம் பயக்கும். இவ்விடத்தில் திருவாய்மொழி ஈட்டாசிரியர் குறிப் பிட்டுள்ள நிகழ்ச்சியொன்றினை நினைவு கூர்கின்றேன். பராசர பட்டர் காஞ்சியைச் சேர்ந்தவர். உடையவர் காலத்தில் திருவரங்கம் பெரிய கோயிலில் தலைமை பட்டாச்சாரியராகப் பணியாற்றினார். உடையவரும் காஞ்சியைச் சேர்ந்தவரே. இந்த இருவர்தம் புகழைக் கண்டு திருவரங்கத்தைச் சேர்ந்த சில வைணவர்கள் அழுக் காறு கொள்கின்றனர். ஒருநாள் பட்டர் திரையிடப்