பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பெற்ற கருவறையினுள் ஏதோ கைங்கரியத்தில் ஈடுபட் டிருந்தார். அவர் உள்ளே இருந்ததை அறியாமல் அர்த்த மண்டபத்தில் இருந்த இரண்டு வைணவர்கள் பட்டர்மீது இல்லாததும் டொல்லாததுமான பல குறைகளைச் சுமத்தி வசை மாரி பொழிந்த வண்ணம் இருந்தனர் . இதனைச் செவி மடுத்துக் கொண்டிருந்த பட்டர் அமைதியாகத் திரையை விலக்கிக் கொண்டு வெளி வந்ததைக் கண்ட வசை மாறி பொழிந்த இருவரும் திடுக்கிட்டனர். அதிகமாக வசை வழங்கிய அன்பருக்கு இறைவன் உடுத்துக் களைந்த பீதக ஆடையைப் போர்த்தினார்; சற்றுக் குறைவாக வைதவருக்கு தமது மோதிரத்தைக் கழற்றி அவர் கையில் பொருத்தினார். அமைதியாக, தேவாளுக்குப் பயந்து இவற்றை வழங்கியதாகக் கருதுதல் வேண்டா. இறைவன் திருமுன் எனது குறைகளை எடுத்துக் காட்டியதால் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் தவிர்த்துக் கொள்ளவும் அடியேனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. இந்தப் பேருபகாரம் புரிந்தமைக்கு மிகவும் நன்றி என்று கூறினாராம். சட்ட மன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் குறைகளை ஆட்சியிலுள்ளார் ஏற்றுக் கொள்ளு. தலும், ஏற்கப் பெற்றதைத் திருத்திக் கொள்ளுதலும் நன்று குறைகளை எடுத்துக் காட்டிமைக்கு அவர்மீது சினமோ குரோதமோ கொள்ளல் ஆகாது. இதனால் குற்றம் சாற்றுவோரும் கண்மூடித்தனமாக எடுத்ததற்கெல்லாம். குறை கூறுதலும் ஆகாது. இருதிறத்தினரும் பொது மக் களின் பிரதிநிதிகள். பொது மக்கள் செலவில் சட்ட மன்றப் பேரவை தடை பெறுகின்றது. சட்ட மன்றத்தினுள் பார் வையாளர்கள் நடவடிக்கைகளைக் கவனிக்கின்றனர். அடுத்த நாள் இந்த நடவடிக்கைகள் செய்தித் தாள்களில், வெளிவரும் போது இலட்சக்கணக்கான மக்கள் அவற்றைப் படிக்கின்றனர். ஆகவே, இருசாராரும் தம் கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றுவது நாட்டு நலனுக்கு உகந்தது. அங்ங்னமே தலைமைச் செயலகத்திலும் பிற அலுவலகங்: