பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை. துன்பத்தைத் தரும். அவ்வாறே காவல் என்னும் கடமை யைப் பெற்ற அரசன் மாட்சிமை பொருந்தி இருத்தல் வேண்டும்; ஆட்சி முறையைத் திறம்பட அறிந்தானாதல் வேண்டும். அங்ங்னமாயின் அன்னவன் ஆட்சி எத்தகைய ஊறுபாடும் இன்றி விளங்கும். அதனால் நாடு தலம் பெறும்; அவனும் சீர் பெறுவான். அரசு புரியும் தகுதி அவன்தனக்கு இல்லேயேல், அவன் உட்பகை, புறப் பகைகளாகிய சேற்றில் அழுந்திப் பெருந்துன்பதைத் அடைந்து நீங்காத் தொல்லைக்கே இடமாவான். இந்த அறவுரை அறிவுரை - அரசு புரிகின்ற மன்னன் மாண். பினையும் அம்மாட்சியால் விளையும் பயனையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த அறிவுரையை வழங்கியவனும் ஒரு மன்னன் எனின், அரசர்தம் மாண்பினை எங்ங்னம் இயம்புவது? இதே கருத்தைப் பிறிதொருவிதமாக உறையூர் மருத். துவன் தாமோதரனாள் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப் பாடிய பாடலில் கூறுகின்றார். கடற்கரையினிடத்து உப்பங்கழியின் நீரால் உப்பு விளை கின்றது. வன்மை அமைந்த பகடுகள் பூட்டப்பெற்ற சகடை அவ்வுப்பினை முகந்து செல்கின்றது. அச்சகடை மலைநாட்டை நோக்கிச் செலுத்தப்பெறுகின்றது. செல் லுங்கால் சகடையின் ஆரைகள் மண்ணுள் குழி பாய்ந்து பகடுகளின் செலவுக்குத் தொல்லையை விளைவிக்கின்றன. மேலும் ஈர்த்துச் செல்லகிலேம் எனப் பகடுகள் எண்ணி வாளா நில்லாது தம் உடல் வன்மை முழுவதினையும் பயன்படுத்தி முன்னேறிச் செல்கின்றன. பகடுகளை ஒத் தனர் அரசர். அவர் அரசியலாகிய 3 శ్రీ హర) L அதன் இயல் நெறியில் தம்மை அழுத்தி நசுக்கினும் அஞ் சாது அவலம் மேற்கோள்ளாது ஆக்கத்துடன் முன்னேறு கின்றனர். இக்கருத்து 'கானற், கழியும் முகந்து கல் நாடு மடுக்கும், ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், உர