பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் முறைமை 3 G3 னுடை நோன்பகட் டன்ன எங்கோன்’ (புறம் - 66) என்ற பாடற் பகுதியினாலும் சிறப்பிக்கப் பெறுகின்றது. மேற்குறிப்பிட்ட தொண்டைமான் இளந்திரையன் கருத்தைத் திருத்தக்கதேவர், ஆர்வலஞ் சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்நிலத் துரு மாயின் நீடுயல் காலம் செல்லும் ஊர்நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும் தார்நில மார்ப! வேந்தர் தன்மையும் அன்னதாம்ே" (ஆர் - ஆரக்கால், ஆழி - சக்கரம்) என்று கூறுதலும் நன்கு அறியப்படும். ஊழ் செயற்படுதல்: இந்த உலகில் பல்வேறு நாடு. களில் பல்வேறு விதமாக ஆட்சி முறைகள் நடைபெற்று வருகின்றன, முடியாட்சி முறை குறைந்து எல்லாம் குடி யாட்சி முறையாக மாறி வருகின்றன. இதிலும் பல முறைகள். அமெரிக்காவிலும் குடியரசு முறை; உருவியா விலும் குடியாட்சி முறைதான். நமது இந்தியாவிலும் இதே முறைதான். அமெரிக்காவில் குடியரசுத் தலைவ ருக்குத்தான் எல்லா அதிகாரமும், இந்தியாவில் பிரதம ருக்குத்தான் அதிகாரம் அனைத்தும். உருவதியாவின் ஆட்சி முறையே தனி பல்வேறு ஆட்சி முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மானிட இயல் கலைக் களஞ்சியத்தை ஒரு புரட்டு புரட்டினால் Forms. of Government பற்றிய விவரங்களைத் தெளிவாக அறிய லாம். அரசியல் துறைக்குப் பாடநூலாகவுள்ள நூலின் 20 சிந்தா (2909) முத்தி இலம்பகம்