பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓台登 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மூலமாகவும் பல்வேது அரசு முறைகளை அறிந்து கொள்ள லாம். இவையெல்லாம் மக்கள் நலனுக்காக மக்களால் தயாரிக்கப்பெற்ற அரசு முறைகள். இத்தனைக்கும் மேலாக, இறைவன் படைப்பில் ஒரு முறையான ஆட்சி நடைபெற்று வருகின்றது. விண்ணி லும் மண்ணிலும் நிகழும் மாறுதல்கள் ஒருவித ஒழுங்கு முறைக்கு-முறைமைக்கு-உட்பட்டு நடந்து வருகின்றன. ஞாயிறும் திகங்ளும் விண்மீன்களும் கோள்களும் ஒழுங் காகத்தான் இயங்கி வருகின்றன. காற்றும் மழை யும் தட்பமும் வெட்பமும் மற்றவைகளும் ஒழுங்குபெறவே அமைந்து வருகின்றன. ஒரறிவு உயிர் முதல் மக்கள் வரை யில் பலவகை உயிர்களும் உடம்பெடுத்துப் பிறப்பது முதல் இறப்பது வரையில் எல்லாம் ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே நடந்து வருகின்றன. மக்கள் மனம் கொண்டு வாழும் வாழ்க்கையில் நிகழும் எழுச்சி-வீழ்ச்சி, உயர்வு - தாழ்வு, ஆக்கம் - கேடு, நன்மை - தீமை, உடைமை - வறுமை, இன்பம், துன்பம் முதலிய பலவும் இவ்வாறே ஓர் ஒழுங்கு முறையில் அமைந்து வருகின்றன. இந்த ஒழுங்கு முறையை ஆய்ந்து அறிவது அருமை; ஆனால் இவை யாவும் உண்டு என்று உணர்வது எளிது இத்தகைய ஆட்சி முறையை - இறைவனது அருளாட்சி முறையை - ஊழ் என்று வழங்கினர் நம் பண்டைச் சான் றோர். இந்த அண்டங்களின் ஒழுங்குமுறை அமைப்பை முறை மையைக்கவிஞர்கள் நன்கு அநுபவித்துத் தம் அனு பவத்தைக் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். பாரதியார், விண்டு ரைக்க அரிய அரிதாய் விரிந்த வான வெளியென - நின்ற்னை; அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை