பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் பலவகையில் இருந்தாலும் அவையெல்லாவற்றுக்கும். அடிப்படையாக உள்ள அதன் சொற்பொருள் அற்றது. என்பதாகும். அது பற்றற்ற நிலை: தன்னலப்பற்று அற்ற தூய்மை, நுட்பமும் ஆற்றலும் கொண்ட அத் நிலையை உண்மை’ என வழங்கலாம். நன்மை என் றும், நேர்மை’ என்றும், குணம்’ என்றும், நல்லூழ்' என்றும் கடமை என்றும் பிறவாறும் கருதலாம். ஆகவே தொல்லாசிரியர்கள் அறம்' என்பதை பல்வேறு கருத்து களிலும் ஆள்வர். - - பொதுவாக நல்ல கருத்துகளையெல்லாம் சிவம்' என்ற சொல்லால் நம் பண்டையோர் உணர்த்துவது. போல அறம்' என்ற சொல்லும் பல நல்ல கருத்துகளை யெல்லாம் தன்னுள் அடக்கியுள்ளது எனலாம். எல்லாம். வல்ல முழு முதற் கடவுளைச் சிவம் என்று வழங்கி னால், அதன் இயக்கத்தை, செயலை, செயலாற்றலை, அருளை அறம்' எனலாம். இக்காரணத்தால் அறம் அம்மையைக் குறிக்கும்; அதாவது சிவத்தின் ஆற்றலை, நெறிமுறையை, எதிரற்ற இயக்க வல்லமையைக் குறிக்கும். அம்மை அப்பன் வேறு என்பது பொருந்தாததைப் போலவே, அறமும் சிவமும் வேறு அல்ல என்பது போதரும். திருக்குறளில் அறத்துப்பாலில் கூறியுள்ள அனைத்துக் கருத்துகளும் அறத்தில் அடங்கும்; ஏனைய இரண்டு பால்களிலும் கூறப்பெற்றுள்ள சில கருத்துகள் ஒரோ வழி அறத்தில் அடக்கிக் காட்டலாம். வள்ளுவப் பெருந்தகை அறத்தில்-அறநெறியில்-அழுத் தமான நம்பிக்கையுடையவர். மறந்தும் பிறர்க்குத் தீங்கு பயப்பனவற்றை எண்ணக்கூடாது. அவ்வாறு எண் னினால் எண்ணியவனுக்கே கெடுதி விளையும். அவ்வாறு விளையுமாறு அறமே செய்துவிடும்’ என்கின்றார். . . . . மறந்தும் பிறன்கேடு குழற்க குழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)