பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器镑密 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அண்டங்களின் அமைப்பையும் அவை விண்வெளியில் சுழலும் அற்புதத்தையும் இன்னொரு கோணத்தில் காண் கின்றார் திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார். ஞாலத்திகிரி முதுநீர்த் திகிரி நடாத்தும் அந்தக் காலத்திகிரி முதலான யாவும் கடல்க டைந்த நீலத்திகிரி அணையார், அரங்கர் நிறைந்த செய்கைக் கோலத்திகிரி தலைநா வினில் கொண்ட கோலங்களே.* இப்பாசுரத்திலுள்ள திகிரிகளை முதலில் இன்னவை என அறிந்து கொண்டால்தான் பாட்டின் சுவை தெரியும். கற்கண்டு உமிழ்நீரில் கரைந்தால்தானே இனிப்புச் சுவையை அறிய முடியும்?இப்பாடலில் அரங்கர் இறைவனாகின்றார். ஞாலத்திகிரி : பூமியின் சுற்றளவு 25000 மைல். இவ்வளவு பெரிய உடம்பைத் துக்கிக் கொண்டு மனோ வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது பூமி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் கோடி மைல். தான். சுற்றுவதுமல்லாமல் சூரியனையும் சுற்றுவழியில் சுற்றி வருகின்றது. பூமிஇந்தச் சுற்று வழியின் சுற்றளவு 54கோடி மைல். ஒரு முறை சுற்ற ஒராண்டு ஆகின்றது. பூமி யைப் போலவே பல அண்டங்கள் சூரியனைச் சுற்றி வரு கின்றன. சூரியனும் அதன் பரிவாரமான செவ்வாய், புதன் முதலான கோள்களும் எட்டாத வெட்ட வெளி யில் சுற்றிக் கொண்டுள்ளன. இதைப் போலவே எத் தனையோ சூரியர்கள் உடுக்கள் போல் காட்டிக் கொண்டு வான வெளியில் சுற்றுவழியில் சுற்றிக் கொண்டேயுள் என; ஒரு கணக்குப்படி சுற்றுகின்றன. இவ்வாறு சலி யாது சுற்றும் அண்டங்களும் பிரம்மாண்டங்களும் கவிஞர் 23. திருவரங்கத்து மாலை-89,