பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்இலக்கியங்களில் - முறைமை 307 மன்க்கண்ணுக்கு உருளைகள் அல்லது சக்கரங்கள்போல் தோன்றுகின்றன. இந்தப் பேரண்டச் சக்கரம்தான் 'இாலத்திகிரி பூமி சுற்றும்போது அத்துடன் சூழ்ந் துள்ள காற்று மண்டலமும் சேர்ந்தே சுற்றுகின்றது என்பது அறியத்தக்கது. முதுநீர்த்தி கிரி : ஒவ்வோர் அண்டத்துடன் அவ்வண் டத்திலுள்ள பொருள்களும் உருமாறிச் சுற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கடல்நீர்-நீராவி - மேகம்-மழை - ஆறு என்று மாறிக் கடலுடன் கலக்கின்றது. மீண்டும் ஆவி-மேகம்-மழை-ஆறு-கடல் என்று சக்கரம் சுழல் கின்றது. இவ்வாறு கடல்நீர் சுற்றுவதை முதுநீர்த் திகிரி என்கின்றார் அய்யங்கார் (முதுநீர்-கடல்நீர்). இந்தச் சக்கரத்தைப் போலவே கார், கூதிர், முன்பணி, பின் பனி, இளவேனில், முதுவேனில் என்று பருவச்சக்கரங்களும் பிறப்பு-இறப்பு என்ற சக்கரமும் சுழன்று வருகின்றன. காலத்திகிரி ; இது கண்ணுக்குத் தெரியாத சக்கரம்’. இதுவே ஞாலத் திகிரி, முதுநீர்த் திகிரி முதலியவற்றை இயக்கும் ஒர் அற்புதத் திகிரி; இதுவே மூலத்திகிரி. ஒரு கடிகாரத்திலுள்ள பல சக்கரங்களையும் இணைத்துக் கொண்டும் வில்லோடு (Main spring) of 35.1% கொண்டும் சுற்றிக் கொண்டிருக்கும் மூலச்சக்கரம் போன் றது. இது. கண்ணுக்குப் புலப்படாத இந்தக் காலத் திகிரிதான் இந்த உலகத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகின்றது. மிகப்பெரிய ஆலமரம் அடையாற்றி லுள்ளது போன்றது - ஒன்றைக் காண்கின்றோம். அதன் வயது 250 ஆண்டுகள் இருக்கலாம். 250 ஆண்டுகட்கு முன்பு அது ஒரு சிறு ஆல விதையில் ஒளிந்து கொண்டி ருந்தது. காலச்சக்கரம் சுழன்று சுழன்று விதையில் 24. இதுவே வைணவ தத்துவத்தின் அசித்தின் ஒரு பகுதியான காலத் தத்துவம்; இது சத்துவ சூனியம்’ என்றும் வழங்கப்பெறும்.