பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.08 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை ஒளிந்து கொண்டிருந்த ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்து விட்டது. இந்த அகிலத் தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் காலச் சக்கரத்தின் சுழற்சியால் வெளிவந்தவையே. ஆகவே, நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டும் சூத்திரதாரராக இருப்பது காலம் என்ற திகிரி எனலாம். இதனையே சுமார் 800 ஆண்டு: கட்கு முன்னிருந்த பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், ஞாலத்திகிரி முதுகீர்த் திகிரி நடாத்தும் அந்தக் காலத்திகிரி முதலான யாவும்... என்று பாடினார். நீலத் திகிரி: இவர் திருவரங்கத்தில் பள்ளி கொண்டி ருக்கும் பெருமாள். பாற்கடலைக் கடைந்தபோது ஒரு நீலமலையை மத்தாக வைத்துக் கடைந்தார் அவர். அந்த மத்தைப்போல நீலமேனியையுடையவர் நம் அரங்கர். அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கர் ஒரு நியதிக் கோலத். தைப் போட வேண்டும், அதற்கு அடங்கிப் பேரண்ட உருளைகள் உருள வேண்டும் என்று தீர்மானித்தார். அவ்வளவுதான். கோலத்திகிரி இஃது அரங்கர் கையிலிருக்கும் சுதர் சனம் ன்ன்னும் அழகிய சக்கரம்; திருவாழி ஆழ்வான் என்றும் இதனைச் சொல்வர். இஃது அவர் கையை விட்டுப் பாய்ந்து மரம் நடுபவர் முதலில் போடும் கோலப் புள்ளிகள்போல உலகப் படைப்புக் காலத்தில் புள்ளி கள் போட்டது. அந்தக் கோலத்தில் காலத்திகிரி பய பக்தியோடு உருண்டு சென்றது. காலத்திகிரியினின்றும் பிறந்து, கடிகாரச் சக்கரங்கள்போல் அதோடு இணைந்து நிற்கும் ஞாலத்திகிரி, முதுநீர்த்திகிரி முதலிய திகிரிகளெல் லாம் நியதி தவறாமல் தொடர்ந்து சுழன்றன. இத் திகிரித் தொடர்களைக் கற்பனையில் கண்டு உள்ளம்.