பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-முறைமை 器获努 பூரிக்கின்றார் திவ்விய கவி. அந்தப் பூரிப்பில் தோன் றியதுதான் மேற்குறிப்பிட்ட கவிதை, கூர்தல் அறக் கொள்கை (Theory of Evolution) அய்யங்கார் சிந்தை யில் - சிந்தனையில் - ஓர் அற்புதக் கவிதையாக மலர்ந்து விட்டதைக் கண்டு வியப்பெய்துகின்றோம்; அதைப் படித்துச் சுவைக்கின்றோம்; மனத்தில் நினைந்து அசை போடுகின்றோம். இதுவே உலகப் படைப்பின் முறைமை யைக் காட்டும் அற்புதக் கவிதையாகத் திகழ்கின்றது. திருக்குறளின் இறுதியில் உள்ள ஊழ் என்பது ஒரு தனி இயல்: ஆம், ஒப்பற்ற தனி இயலே. இந்த அற நூலில் உள்ள எல்லாப் பகுதிகளின் எல்லா அதிகாரங் களுக்கும் உரியவர்களை அது, இறைவன் சார்பில் இயக்கி வரும் தனி நிலைமைக்குரியது. தனி நிலைமைக்குரிய ஒர் ஒப்பற்ற முறைமை' என்று கூட வழங்கலாம். அருளாட்சி நடத்தும் இறைவனின் முறைமை" என்று சுட்டி உரைக்கலாம். இறைவனாகிய பரம்பொருள் எப்படித் தனியனோ அப்படியே ஊழும் ஒரு தனி நிலையை யுடைய ஒருவகை ஆற்றல். இறைவன் எங்ஙனம் மறை பொருளாய் நின்று உலகம் யாவையும் தாம் உளாக் கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டைப்' புரிகின்றானோ, அங்ஙனமே ஊழும் (Fate) மறை பொருளாய் நின்று உலகிலுள்ள இயக்கங்கள் எல்லாவற்றிற்கும் காரனமாய் நின்று நிலவுகின்றது. இறைவன் முறைமை தவறாதவன் அறவோன்; ஊழும் அறத்திறன் மிக்கது. அவனன்றி ஒர் அணுவும் அசையாது’ என்ற ஒரு முதுமொழி உண்டு. அங்ங்னமே ஊழ்' ஊடுருவாது ஒர் அணுவும் அசைவதில்லை என்றும் சொல்லி வைக்கலாம். இதன் இயல்பு, உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பா லனையவும் அன்னவாம்.' 25. நாலடி - 104