பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

念霍莎 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி முறைமை (உறற்பால-நேரிடத்தக்க நீக்கல்-விலக்குதல்; உறுவர்ஆற்றல்மிக்க முனிவர்) எனவும், வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது,' {உறற்பால-இன்ப துன்பங்கள், தீண்டா-அடையாமல்; எனவும், சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா வாம்இடந்தே யாகும். சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால் இறுகாலத்து என்னை பிரிவு' (சிறுகாலை-உயிர் உடம்பையடையும்காலத்தில்; பட்ட -அநுபவிக்க வேண்டுமென்று நியமிக்கப்பட்ட பொறி - ஊழ்; உறுகாலம்-வருங்காலம், ஊன்று-ஊன்றுகோல்; இறு காலம் - கெடுதியடையுங்காலம்) எனவும் நாலடியாரில் விளக்கப்படும். இறுதிப் பாடலில் குறிப்பிடப் பட்ட கருத்து, வருந்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன் போமின்என்றால் போகா.: ಭFಿಘ# ஒளவைப்பாட்டியாலும் விளக்கப்படும். இப் பாடல்கள் யாவும் பழவினைபற்றியவை. வினைப்பயன் தானே ஊழாக வருவது? கம்பராமாயணத்திலும் இந்த ஊழ்வினை ஈரிடங்களில் காட்டப்படுகின்றது. கும்பகருணனைத் தம் பக்கம் சேர்த்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டு வீடணன் அனுப்பப் பெறுகின்றான். சகோதரர்களிடையே பேச்சு 26. டிெ 109 27. டிெ 10 28. நல்வழி - 5