பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 3 i. நடை பெறுகின்றது. கும்பகருணன் இராமன் பக்கம் வந்து சேர இசையவில்லை;அண்ணன் பொருட்டுச் செஞ்சோற்றுக் கடன் கழித்துப் போர்க்களத்தில் உயிர்விடத் துணிந்து விட்டான். தனக்காக வருந்த வேண்டா என்று கூறிய பகருணன், ஆகுவது ஆகுங் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போகுவ தயலே நின்று போற்றினும் போதல் செய்யும் சேகற உணர்ந்தோர் நின்னில் யாருளர்? வருத்தம் செய்யாது ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்' (சிந்தி - சிதறி, அயல் - பக்கம்; சேகற - குற்றமற; என்றும் உள்ளாய் - சிரஞ்சீவியேர் என்று ஊழின் போக்கை உணர்த்தி ஆறுதல் கூறி அனுப்புகின்றான். பிறிதோர் இடம்: வேற்றுக் கொடியாள் விளைவித்த வினையைக் கேட்டதும் இலக்குவன் கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் ஆறாக் கனல் போல் சினங் கொள்ளுகின்றான். அப்போது இராமன் நேர்ந்த காரி யத்திற்கு விதிதான் காரணம் என்று எடுத்துக் காட்டு கின்றான். தான் காட்டுக்குச் செல்வது தந்தையின் குற்ற மன்று; தாயாகிய கைகேயியின் பிழையினாலுமன்று; பர தனுடைய தவற்றால்தான் என்றும் சொல்ல இயலாது; அஃது ஊழின் பயனால்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டுகின்றான். - 29. கம்பரா - கும்பகருணன்வதை - 166