பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3罩罗 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை ; அற்றே பதியின் பிழையன்று; பயந்து நமைப்பு ரந்தாள் மதியின் பிழையன்று மகன் பிழை யன்று, மைந்த! விதியின் பிழை?? என்பது இராமன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஊழ் பற்றிய குறிப்பாகும். காவியத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நிகழும் பல நிகழ்ச்சிகளும் ஊழின் காரணமாக நடப்பதாகவே காட்டப்பெறுகின்றன. இராமன் தண்டகாரண்யத்தில் பஞ்சவடியிலிருக்கும் போது அரக்கர் என்னும் கான் சுட முளைத்த கற்பின் கனலியை இராவணன் தூக்கிச் செல்ல எண்ணுகின்றான். இதன்பொருட்டு அவன் மாரீசனை அணுகி அவன் உதவி யைக் கேட்டபோது, அதற்கவன், பேதைமதி யாலிலதோர் பெண்ணுருவம் என்றாய் சீதையுரு வோகிருதர் தீவினைய தன்றோ?' என்று எச்சரிக்கின்றான். மன்னாநின் வாழ்வை முடித்தாய்; மதியற்றாய்; உன்னலின்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன்.” 30. நகர் நீங்கு - 134 31. மாரீசன் வதை - 192 32. டிெ 177