பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 31 3 என்று இராவணன் மதி கெட்டது ஊழ்வினை என்றே எண்ணி அதையும் அவனுக்கு உணர்த்துகின்றான். கெடு மதி கண்ணுக்குத் தோன்றாது. நிகழ்ச்சிகள் ஒன்றை யொன்று தொடர்ந்து செல்லல் ஊழ்வினையின் வலியால் தான் என்று உணர்த்தப்பெறுகின்றது. வள்ளுவர் பெருமான் ஊழை இருவகைப்படுத்திக் காட்டுவர். ஒன்று ஆகூழ், ஆகலுாழ், நல்வினை என்று கூறப்படுவது; மற்றொன்று போகழ், இழவூழ், தீவினை என்று கூறப்பெறுவது. நல்லூழ் வருகின்ற காலத்தில் ன்கப்பொருள் மிகுவதற்குக் காரணமான சுறுசுறுப்பும் முயற்சியும் உண்டாகும்; தீயூழ் வருகின்ற காலத்தில் சோம்பலும் முயற்சியின்மையும் உண்டாகும். ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி (371) என்பது வள்ளுவர் வாய்மொழி. பொருள் இழப்பதற்குக் காரணமான ஊழ் அறிவைக் கெடுத்துப் பேதையாக்கும்; பொருள் சேர்தற்குக் காரணமான ஊழ் அறிவை விரி வாக்கும். இழஆழ் அறியாமையையும் ஆகலூழ் அறிவின் விரிவையும் உண்டாக்கும் என்பர் இப்பெருமான் (372). காலத்துக்கேற்றபடி நல்லவை கெட்டவையாகவும் கெட் டவை நல்லவையாகவும் தோன்றுவதும் உண்டு. இதனை மாரீசன் வாயில் வைத்துக் கம்பன் பேசுகின்றான். இராவணன் வேண்டுகோளை மாரீசன் மறுத்தபோது அவன், நீ பிடிவாதமாக என் ஏவலை மறுக்கின்றாய். நான் நினைத்தால் உன்னை இப்பொழுதே என் கூரிய வாளால் வெட்டி வீழ்த்தி என் மனக்குறையை முடித்துக் கொள்ள முடியும். நீ உயிரோடு இருக்க விரும்பினால் என் ஏவலை மறுக்காது என் குறிப்பின் வழி நடப்பாய்” என்றான். இந்நிலையில் மாரீசன்,