பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #4 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை معه بمصيبتسمعه உன்வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தி னேன்; மற்று என்வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்: நன்மையும் தீமை யன்றோ நாசம்வந்து உற்ற போது’’ (உறுதி - நன்மை இறுதி - தீமை, இசைத்தேன்.கதி னேன்! என்று பேசும்போது இந்த உண்மையை உணர்த்துகின் தான். நல்லூழ் உண்டான காலத்தில் பண்டங்களை வெளியே விட்டு விட்டாலும் திருட்டுப் போவதில்லை; அல்லாத காலத்தில் பண்டங்களை எவ்வளவு காத்தாலும், நிற்கமாட்டா. மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் விளையுலந்தக் கால்* என்ற சமண முனிவரின் வாக்கும் ஈண்டு சிந்தித்தல் தகும். திருக்குறளின் தொடக்கம் தனி முதற் பொருளாகிய இறைவனைப் பற்றியது; அறத்துப்பாவின் முடிவு தனி நிலைத் திறனாகிய ஊழைப் பற்றியது. இந்த ஊழை. வள்ளுவர் பெருமான் தெய்வம்' என்றே போற்றுவர். இதனையே தொல்காப்பியரும் பால்வரைத் தெய்வம்' என்று குறிப்பிடுவர். தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என்ற குறட் பாவில் தெய்வத்தான் என்பது ஊழினால்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் காண்க. 33. கம்பரா. மாரீசன் வதை-202. 34. நாலடி-93, 35. தொல் : களவியல் , 90.