பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

灌盛 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை j என்பது அவர்காட்டும் அறவழி ஒளிவிளக்கு. முடிவு நல்ல தாக ஏற்படுமானால் அதுவே போதும் என்றும், அந்த முடிவை அடைவதற்கு உரியவழி தவறாக இருந்தாலும் கவலை இல்லை என்றும் சில அறநூல்கள் கருதும். வழியைப்பொருட்படுத்தாமல், முடிவைப் பற்றி வற் புறுத்திக் கூறும் (End justifies the means) sāTāā65th உள்ளன. ஆனால், வள்ளுவர் பெருமானுக்கு இக்கருத்து உடன்பாடு அல்ல. கருதிய முடிவை அடைய முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதற்கு உரிய வழி தூய்மையாகவே இருக்க வேண்டும் என்பதே இப்பெருமானின் அசைக்க முடியாத கோட்பாடு. இதனை அப்பெருமான் பல இடங் களிலும் வற்புறுத்துகின்றார்."பெற்ற தாயின் பசியையே காணநேர்த்தாலும், அதனைப் போக்குவதற்காகவும் சான் றோர் பழிக்கும் தீய செயல்களைச் செய்யக்கூடாது’’ (656) என்பார். பிறர்க்கு உதவியாக ஈதல் நன்று. அதனால் மேலுலக இன்பம் கிட்டும்' என்பார். 'அந்த மேலுலகம் இல்லையென்று மறுக்கப்பட்டாலும் ஈதலே நல்ல அறச்செய லாகும்’ (222) என்று ៩.ផ្វា , உயர்ந்த குறிக்கோள் நெறியுடன் வாழ வேண்டும் என்பது அவரது தலையாய நோக்கம். அறநெறியைப் போற்றி வாழ்வதால் இந்த உலக வாழ்வுக்கு இடை யூறாகும் என்றாலும் அந்த இடையூற்றினை ஏற்றுக் கொள்வதே நல்லது என்று கருதுவார் அந்தப் பெருந் த ைக. அதனால் உயிர் போவதானாலும் போகட்டும் என்று வலியுறுத்துவதே அவர்தம் போக்கு. பிறர் இல் லாத போது பழித்துப் பேசிப் பொய் நெறியில் வாழ்க்கை நடத்துவதை விட, வாழாமல் செத்துப் போவதே நல் லது. அறத்தின் பயனாகிய நன்மை அதனால் கிடைக் கும்’ (183) என்று அவர் வற்புறுத்துவதைக் காணலாம். 'பிறருக்கு உதவியாக வாழும் ஒப்புரவு நெறியால் கேடு வரும் என்றால், தன்வாழ்வை விற்றாவது அந்தக் கேட் டைப் பெறுவது தக்கது’’ (220) என்பார். "நடு நிலைமை