பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 l 5 தமிழ் இலக்கியங்களில் - முறைமை மக்கள் ஆற்றும் செயல் பற்றற்றதாய் அமைந்தால் அஃது இறை செயலாகக் கொள்ளப்படும். அதுவே பற் றுடன் நிகழ்வதானால் அஃது ஊழ் என்று வழங்கப் படும். ஏனென்றால் இறைவன் பற்றற்றவன்; அதனால் பற்றற்ற செயல்கள் எவரிடத்தில் நிகழ்ந்தாலும் அதனை அவரிடத்தில் நிகழ்விப்பவன் இறைவனேயாகும். பற்றற் றவர், தாம் அருளில் ஒடுங்கித் தம் உணர்வு அற்றவராய் இருப்பர்; ஆதலால் அவரிடத்தில் இறை செயலே நிகழ் வதாக அமைகின்றது. ஆயின் ஊழ் அப்படி அன்று. பற் றுள்ளவர் நன்மையோ தீமையோ செய்யும்போது அவர் செயலில் இறைவன் அவ்வளவாகக் கலப்பதில்லை. அதனால் அவரவர் செயலே பின்னும் பின்னும் பயன் தர வேண்டியுள்ளது. இறை செயலாக இருப்பின் அதற்குப். பயன் பிறவாப் பெ நிலை கூடிய பெரு வாழ்வாக அமைந்து விடும். பற்றுள்ள செயல்கள் யாவும் அந்தப் பற்றுக்கேற்ற பயன்களையே தந்து வரும். இப்பயன் தம் தம் செயல்தன்மைக்கேற்ப நல்லதாகவோ கெட்ட தாகவோ அமையும். பகவத்கீதையில் பற்றுடன் ஆற்றும் செயல் கர்மம் (வினை) என்றும், பற்றற்றநிலையில் ஆற்றும் செயல் கர்மயோகம் என்றும், பயனையும் பற்றற்றானுக்கு சமர்ப்பித்துச் செய்வது கர்மசந்நியாசம்’ என்றும் கருதப்பெறுவதை ஈண்டு நினைத்தல் தகும். இந்நிலையில் பற்றுள்ள செயல்கள் நடைபெறும் போது அவற்றிற்கேற்ப பயன் கூட்டும் முறையில் உரு வாக்கி இயக்கி நடத்துவதற்காக இறைவனது ஆற்றவில் ஒரு கூறு அவற்றின்கண் பதிந்து நிற்கும். இந்தப் பதிவைப் பெற்ற அவரவர் செயல்களே இறை பதிவு காரணமாக ஊழ் உருத்து வரும்போது தெய்வம் என்ற பெயரைப் பெறுகின்றது. செயல்கள் பின்னொரு காலத்தில் பயன் கூட்டுவதற்காக உருத்து வரும் நிலையில் செய்தவனைச் செய்த முறையே தாக்குதலால் அம் முறைமை கருதி அவை ஊழ் எனப் பெயர் பெறுகின்றன. ஊழ்த்துத ல்