பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 i 6 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை முற்றுதல்; ஊழ் முறைமை. ஊழ்' என்னும் சொல்லுக்கு இந்த இரு பொருளும் உண்டு. கோவலன் வாழ்வில் சூழ்வினை சிலம்பு காரணமாக ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்போது திட்டப்படி ஊழ் நடந்து வந்ததைக் காணமுடிகின்றது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் முற்பகல் செய்யும் பிற்பகல் விளை யும் என்ற பழமொழிகள் எழுந்த காரணம் இது பற் றியேயாகும், வள்ளுவர் பெருமானும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (319) என்ற குறளில் இதனையே காட்டுவர். திட்டப்படி ஊழ் நடைபெறுவதால் விதி' என்றும் அது பெயர் பெறுகின்றது. மற்றொன்று சூழினும் தான் முத்துகின்ற எதிரற்ற வலிமை படைத்தலால் அந்த விதி "தலைமையான விதி' என்ற பெயர் பெறுகின்றது. மக்கள் வாக்கில் இது தலைவிதி' என்று சுருங்கி வழங்கப்பெறு கின்றது. இந்த வினைப்பயனைச் சைவ சித்தாந்த முறையிலும் விளக்கலாம். விரிவஞ்சி அதற்குப் போக வில்லை." இத்தகைய பெரு வலியைப் படைத்ததும், மறைவில் நிகழ்வதுமாகிய ஊழ் என்னும் கயிற்றில் பிணிப் புண்டு எல்லா உயிர்களும் பிறவியில் இயங்கி உழன்று வருகின்றன. ஊழிற்குத் தப்பும் உயிர் ஒன்று கூட இல்லை. இறை பதிவு பெற்ற ஊழாதலால் முடிவில் அது எல்லா உயிர்க்கும் செம்மை கூட்டுவதாகவே அமையும். ‘எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழி சிந்திக்கற் 36. விளக்கம் வேண்டுவோர், ஆன்மிகமும் அறிவி யலும் என்ற என் நூலில் வினையும் வினைப் பயனும் என்ற கட்டுரையில் காண்க (பாரி நிலையம், சென்னை-108)