பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - முறைமை 3 # 7 பாலது. தீயூழால் தொடக்குற்று இடர்ப்படுபவர்கள் அது நன்மைக்கே என்னும் முடிவில் அமைதியாய் அதனை நுகர்ந்து கழித்தல் வேண்டும் நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன்? (379) என்ற வள்ளுவர் வாக்கை உன்னுக. இவ்விடத்தில் ஒரு முக்கிய கருத்தை நினைவில் கொள்ள வேண்டும். இறை யருள் அதன் இயல்பால் நிகழ்வது; ஊழ் உருத்தல் உயிர் களின் செயல் இறையருள்முலம் திரும்பிச் செயலுறுவது: உயிர்களால் இயற்றப்படும் வினை அறிவுடையதன்றாத லால் இறைவனே அதனை உரிய காலத்தில் உரிய உடம் பில் கூட்டுவிக்கின்றான். முறைவழிப்படுதல்' என்பது இதுவேயாகும். நீர்வழிப் படு உம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்’’’ என்ற புறப்பாட்டில் இது விளக்கப்பட்டிருத்தல் காண்க. நுண்ணிய நூல் பலகற்று அக்கற்றறிவைக் கொண்டு ஊழைமாற்றி விட நினைப்பது தவறு. இறை வலிமை சேர்ந்த செயலாதலால் மற்ற வல்லமைகளால் ஊழை எதிர்க்க இயலாது. இறைவலிமை கொண்டுதான் ஊழ் வலியை ஒரளவாவது குறைத்துக் கொள்ள இயலும். மக்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஒரே காலத்தில் தம் பயனை உருத்துத் தருவதென்றால், உயிர்களால் அவற்றைத் தாங்கவே இயலாது. மற்றும் வினைகள் தாம் செய்யப் பட்ட முறையிலன்றி முன் பின்னாக, பின் முன்னாகவருவது அவ்வினையின் தன்மைக்கேற்ப நிகழும். இதற்குக் காரணம் அவற்றின் வன்மை, மென்மைகளாகும். மிகப் பெரிய பாவமும் மிகப் பெரிய புண்ணியமும் செய்த பிறவிலேயே 37. புறம்-192.