பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I 8 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பிரார்த்தமாய் வந்து பயன்தரும். இதனைச் சிவப்பிரகாச ஆசிரியர் எடுத்துக் காட்டொன்றால் விளங்குவர். உழவன் ஒருவன் பனை விதையை இடுகின்றான்; பின்னர் வாழையை நடுகின்றான்; அதன் பின்னர்க் கரும்பை நடுகின்றான்; அதன் பின்னர் கீரையை விதைக்கின் றான். இங்கு அவன் விதைத்த முறைப்படியே பயன் தரும் என்று கருதுதல் தவறு என்பது தெளிவு. தவிர, இறைவனும் ஆருயிர்கள்மீது தான் கொண்டுள்ள அள வற்ற கருணையால் ஆருயிர்கள் தாங்குவதற்கேற்ப ஊழ் களை வகுத்துக் கொடுப்பான். அளந்தன போக மெல்லாம் அவரவர்க்கு அற்றை நானே அளந்தன வாழு நாளும்' என்பது திருத்தக்க தேவரின் திருவாக்கு. சமண முனிவரும் இக்கருத்தை ‘அளந்தனைபோகம் அவரவர் ஆற்றான்' என்று விளக்குவார். வள்ளுவப் பெருந்தகையும், வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377) என்று கூறுவார். இதனால் புலன்களால் இன்பம் நுகர் வதற்கு உரிய பொருள்களைத் தேடிய அளவிலேயே இன்பம் நுகர முடியும் என்று எண்ணலாகாது. ஊழின் அமைதிக்கு ஏற்றபடியே நுகர முடியும். நுகர்வுப் பொருள் களைக் கோடிக்கணக்காகத் தொகுத்து வைத்தவர்கட்கும் ஊழ்வகுத்தபடி அல்லாமல் நுகர முடியாது. உணவுப் பொருள்களையும் உடை முதலிய பிற பொருள்களையும் நிறையச் சேர்த்து வைத்துச் செல்வராக விளங்கியும் பசியின்மை முதலிய காரணங்களால் நுகர முடிவதில்லை. சில செல்வர்கட்கு ஏற்பட்டிருக்கும் நோயால் மருத்துவர் 38. சிந்தா. 213. 39. நாலடி - 103